எவ்வளவு பெரிய கல்லு.. சென்னை இளைஞர்கள் மீது தூக்கி போட்ட புதுச்சேரி கும்பல்.. இதுதான் தவறான செயல்
புதுச்சேரி: சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மது போதையில் தாறுமாறாக ஓட்டி வந்த கார் புதுச்சேரியில் 3 பேர் மீது மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த பலர் சென்னை இளைஞர்களை சரமாரியாக தாக்கினர். இளைஞர்கள் மீது பெரிய கல்லை தூக்கி போட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பல இளைஞர்கள் வார இறுதியில் மட்டுமின்றி கிடைக்கும் நேரமெல்லாம் புதுச்சேரி சென்று அறை எடுத்து தங்கி சரக்கு அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி என்ஜாய் பண்ணுவதற்காக காரில் புதுச்சேரி சென்ற சென்னை இளைஞர்கள் மது போதையின் காரணமாக ஏற்படுத்திய விபத்தால் பயங்கரமாக அடி வாங்கினார்கள்.

என்ன நடந்து என்பதை விரிவாக பார்ப்போம். புதுச்சேரியில் செவ்வாய்கிழமை மாலை ஒரு கார் அதிவேகத்தில் சென்றது. குறிப்பாக நேரு வீதியில் அந்த கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் சென்று கொண்டிருந்த பல இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு அந்த கார் நிற்காமல் சென்றது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.
அந்த காரை பொதுமக்களும், போலீஸாரும் துரத்தினார்கள்.ஆனால் காரை ஓட்டியவர் நிற்காமல் தொடர்ந்து முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை வழியாக பல இடங்களில் தாறுமாறாக ஓட்டியபடி வேகமாக சென்றார். இதனால், பொதுமக்கள் பலரும் அந்த காரை துரத்தி பிடிக்க முயன்றனர்.

இதனிடையே அந்தகார் லாஸ்பேட்டை விமான நிலைய பின்பகுதியான இடையஞ்சாவடி பகுதி நரிக்குறவர் குடியிருப்பு சாலையோரம் உள்ள புதரில் நின்றது. காரில் இருந்து இறங்கி 5 பேரும் தப்பியோட முயன்றனர்.
அப்போது அவர்களை விரட்டி வந்தபொதுமக்கள் கல், கட்டைகளால் கடுமையாக தாக்கினர். காரையும் அடித்து நொறுக்கினர். இதில் காரில் வந்த 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸார் படுகாயம் அடைந்த 5 பேரையும் அந்த கும்பலிடம் இருந்துமீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்
மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் அவர்கள், படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,இந்த கார் விபத்தால் காயமடைந்த 3 பேரும் புறசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர்.
போலீஸார் மருத்துவமனையில் சென்று விசாரணை நடத்திய போது, சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த எபினேசர் (20), திலீப்(27), ஆஷிக் (21), நாத் (25), சுனில் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த ஜூலை 7-ம் தேதி புதுச்சேரிக்கு காரில் வந்துள்ளார்கள்.
இவர்கள் கடந்த 3 நாட்களாக அறை எடுத்து தங்கியிருந்ததும், மது போதையில் காரை தாறுமாறாக இயக்கி பல இடங்களில் விபத்துக்குள்ளாக்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். புதுச்சேரியில் சென்னை இளைஞர்கள் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்று விபத்தை ஏற்படுத்தியவர்களை பிடித்து போலீசில் ஒப்படைப்பது தான் சரியான செயல் என்றும், இப்படி கும்பலாக கொடுரமாக தாக்குவது நிச்சயம் ஆபத்தானது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இளைஞர்கள் மோசமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, மதுபோதையில் 15க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்துச் சென்ற சென்னை வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடத்து காவல்துறையிடம் ஒப்படைத்த புதுச்சேரி பொதுமக்கள். pic.twitter.com/RUoPy0Zk7y
— Korkadu Ashok (@dharunkumaran) July 11, 2023
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications