தெய்வமே.. உங்களுக்கு இப்பவாவது கேட்டுச்சே.. ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பிறக்குது விடிவு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பல ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் பயணிக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வரை சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதுமே சமீப காலமாக முன்பதிவு ரயில்களில் அன்ரிசர்வ்டு பயணிகள் ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டுமின்றி, ஏசி இரண்டாம் வகுப்பு, 3ம் வகுப்பு பெட்டிகளை ஆக்கிரமிக்கும் வீடியோக்கள் வெளியாகின. இதேபோல் தென்னிந்தியாவில் இருந்து வட மாநிலங்கள் செல்லும் ரயில்களிலும், வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்கள் செல்லும் ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறிக்கொண்டு, அங்கு ஏற்கனவே புக்கிங் செய்த பயணிகளுக்கு இடம் தராமல் கழிவறை வரை அமருவதும் தொடர்கிறது. வந்தே பாரத் ரயிலைக்கூட விட்டுவைக்காமல் அதிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்தனர். கடந்த சில மாதங்களில் இந்த சம்பவங்கள் மிக அதிக அளவு நடந்துள்ளது.

எப்போதுமே தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமிக்க முடியாது. அப்படி பயணித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு முன்பதிவு பெட்டியில் முன்பதிவு அல்லாத சாதாரண டிக்கெட்டுகள் வைத்திருந்த ஏராளமான வடமாநில பயணிகள் ஏறிவிட்டார்கள். முன்பதிவு செய்த பயணிகள் குறிப்பிட்ட அந்த முன்பதிவு பெட்டியில் ஏற முடியாத அளவுக்கு வாசலில் முண்டியடித்தபடி அவர்கள் நின்றுவிட்டார்கள். இதன்காரணமாக அந்த பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய முன்பதிவு பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக பல பயணிகள் தங்களது பயணத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி தயாநிதி மாறன் உள்பட பலர் குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் தெற்கு ரயில்வே சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தது.
சென்னை சென்ட்ரல் ரயிலில் நடந்த சம்பவம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வரை போனது.. இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் அஷ்வினி வைஷ்ணவ் கேட்டறிந்தார். தொடர்ந்து அனைத்து கோட்ட ரயில்வே பொது மேலாளர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்போது ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் பயணம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாராம். மேலும் முன்பதிவு பெட்டிகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரயில்வே அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் எந்தெந்த ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டதாகவும், அந்த ரயில்களில் எல்லாம் கூடுதல் டிடிஆர்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம்.
அதேபோல் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் பயணம் செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த நிறுத்தத்தில் அவர்களை ரயிலில் இருந்து இறக்கி விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஜெனரல் கோச் டிக்கெட் எடுத்தவர்கள், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்துள்ளர்களை எக்காரணத்தை கொண்டும் முன்பதிவு பெட்டிகளில் ஏறக்கூடாது என்பதை ரயில் புறப்படும் இடங்களில் தொடர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications