நடிகர் கிருஷ்ணா கைது.. ஸ்ரீகாந்தை தொடர்ந்து.. போதைப்பொருள் வழக்கில் போலீஸ் அதிரடி!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். 2 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று காலை கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் மதுபான விடுதி தகராறு காரணமாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததும், அதனை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. சினிமா தயாரிப்பாளரான பிரசாத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் கைது
இந்த நிலையில் பிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்த போது ஜிபே மூலமாக மட்டும் ரூ.4.72 லட்சம் பரிமாற்றம் செய்து, நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் ஸ்ரீகாந்த் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் முடிவில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணாவுக்கு சம்மன்
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் இன்னும் சில நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அதனடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்து, அவருக்கு சம்மன் கொடுத்தனர். அப்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்.
ஆஜரான கிருஷ்ணா
குடும்பத்தினர் மூலமாக கிருஷ்ணாவை அணுகி விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். இந்த தகவல் அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், நேற்று தனது வழக்கறிஞருடன் நடிகர் கிருஷ்ணா நுங்கம்பாக்கம் போலீசார் முன்னிலையில் ஆஜராகினார்.
16 மணி நேரம் விசாரணை
இதன்பின் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஸ்ரீகாந்த் எனது நண்பர் மட்டும்தான். எனக்கு இதய நோய் மற்றும் இரைப்பை பிரச்சனை இருப்பதல், போதைப் பொருள் உட்கொள்ள முடியாது. அதிமுக முன்னாள் நிர்வாகிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியது.
மருத்துவ பரிசோதனை முடிவு
தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை போலீசார் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அந்த பரிசோதனையின் முடிவில் கிருஷ்ணா போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்று முடிவு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
கிருஷ்ணா கைது
இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர் ஒருவரையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications