ஸ்விட்ச் ஆஃப் ஆன கிருஷ்ணாவின் செல்போன்! போதை பொருள் விவகாரத்தில் சம்மன் போன அடுத்த நொடி தலைமறைவு?
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் கிருஷ்ணா தலைமறைவிட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் மூலமாக கொக்கைன் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு ஸ்ரீகாந்த் அடிமையாகி இருக்கிறார். அதிமுக நிர்வாகி பிரசாத் மீது ஏற்கனவே வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

அடிமையானது எப்படி?
பெங்களூரில் இருந்து பிரதீப் குமார் என்பதை கடத்தி வந்து, பிரசாத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதனிடையே பிரசாத் தயாரித்த ஒரு படத்திற்காக ஸ்ரீகாந்த்-க்கு ரூ.10 லட்சம் சம்பள பாக்கி இருந்துள்ளது. இந்த சம்பளத்தை கேட்ட போதெல்லாம், பிரசாத் கொக்கைன் போதைப் பொருளை கொடுத்துள்ளார். 3 முறைக்கு மேல் பயன்படுத்திய பின், ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக கூறி இருக்கிறார்.
புலம்பிய ஸ்ரீகாந்த்
இதுதொடர்பாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலான கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகளை சோதனை மேற்கொண்ட போது, அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியாகி இருக்கிறது. இதன்பின் நீதிபதிகளிடம் நான் தவறு செய்துவிட்டேன் என்று புலம்பி இருக்கிறார்.
சம்மன் அளித்த போலீஸ்
இதன்பின் ஸ்ரீகாந்த் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் நுங்கம்பாக்கம் போலீசார் தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார்.
தலைமறைவு?
சென்னையில் உள்ள கிருஷ்ணாவின் குடும்பத்தினரை அணுகி போலீசார் விசாரித்துள்ளனர். அதன்பின் குடும்பத்தினர் மூலமாக கிருஷ்ணாவை அணுகிய போலீசார், விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதன்பின் கிருஷ்ணா வருவதாக கூறிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறி இருக்கின்றனர். அதேபோல் கிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட சம்மனுக்கு அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications