ஆஹா! பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்! பிரான்ஸ் அதிபரையும் விடலையே! டின்னரில் சுவாரசியம்.. செம
சென்னை: பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து அளித்தார். இதில் நடிகர் மாதவன் பங்கேற்ற நிலையில் அதுதொடர்பான போட்டோவை பதிவிட்டு டின்னரில் இருநாட்டு தலைவர்கள் செய்தது பற்றி நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ம் தேதி ‛பாஸ்டில் டே' என்ற பெயரில் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் அங்கு தேசியதினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த விழாவுக்காக ஜூலை 13ம் தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். முதல் நாளில் அவர் அங்குள்ள இந்திய வம்சாளவளியினர் மத்தியில் உரையாற்றினார். அதன்பிறகு பிரான்ஸ் தேசிய தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பிரான்ஸ் நாட்டின் படை வீரர்களும், இந்தியாவின் முப்படை வீரர்களும் அணிவகுப்பு மரியாதை செய்தனர். அதனை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். மேலும் இருதலைவர்களின் இருநாடுகள் இடையேயான தொழில், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசினர். அதன்பிறகு 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

முன்னதாக பிரான்சின் மிகவும் உயரிய விருது கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இமானுவேல் மேக்ரான் வழங்கி சிறப்பித்தார். மேலும், பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து வழங்கியிருந்தார். இந்நிலையில் அந்த இரவு குறித்த இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அந்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். மேலும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அருகே இருக்கும் பிரதமர் மோடியுடன் மாதவன் சிரித்தபடி பேசும் படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் மாதவன், ‛‛இந்தோ-பிரெஞ்சு உறவுக்காகவும், 2 நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் ஜூலை 14ல் நடந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் தெளிவாக காண முடிந்தது. நான் முழுவதும் அங்கு இருந்தேன்.

பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் லூவ்ரேில் வழங்கிய டின்னரிலும் பங்கேற்றேன். டின்னரில் பரஸ்பர மரியாதை, நேர்மறையான பார்வை இருந்தது. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆர்வமாக எங்களுக்காக ஒரு செல்பி எடுத்தார். அப்போது பிரதமர் மோடி எழுந்து நின்றார். இந்த 2 பேரின் இத்தகைய செயல், அவர்களின் தனித்தன்மை ஆகியவை என் மனதில் நிலைத்து நிற்கும். இருவரும் கருணை, பணிவு குறித்த பாடமெடுத்துள்ளனர். இருவருக்கும் நன்றி. இருநாடுகளும் ஒன்றாக வளரட்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications