"நல்லகண்ணுவின் சிறுநீரகங்கள் செயலிழந்து போச்சுனு சொல்றாங்க!" உடைந்து அழுத மன்சூர் அலிகான்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் (101) சிறுநீரகங்கள் செயலிழந்து முகம் கருத்துவிட்டதாக அவரது உடல்நிலை குறித்து நடிகர் மன்சூர் அலிகான், மருத்துவமனை வாசலில் கண்ணீர் மல்க பேசியது காண்போரை கலங்கச் செய்தது.
இதுகுறித்து மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், தோழர் நல்லகண்ணு, சிறுவனாக இருந்த போதிலிருந்தே அதாவது பள்ளிக் கூடத்திலேயே வெள்ளையர்களை எதிர்த்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்.

வாழ்நாள் முழுக்க ஒரு போராளியாக எளியவர்களின் பக்கம் நின்றவர்.
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற திருக்குறளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்து உன்னத மனிதராக வாழ்ந்தவர். தற்போது மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.
நல்லகண்ணுவை கைது செய்தனர்
இந்திய கம்யூனிஸ்ட் தடை செய்யப்பட்ட போது நல்லகண்ணுவை தேடி தேடி கைது செய்தனர். 7, 8 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவிலேயே சிறை கைதியாக வாடியவர். சிறையில் மீசையை சுருட்டால் பொசுக்கி அவர் மிகவும் துன்புறுத்தப்பட்டார்.
எத்தனை துன்புறுத்தல்கள்
எத்தனை துன்புறுத்தல்கள் இருந்தாலும் அவர் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. உழைப்பாளிகளின் பக்கம் இருந்தார். 101 வயதாகும் நல்லகண்ணு வாழும் இந்த மண்ணில் நானும் வாழ்கிறேன் என்பதில் எனக்கு பெருமை.
சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன
எளிமையான போராளி. மனதிற்கு வேதனையாக இருக்கிறது. நல்லகண்ணுவின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன என சொல்கிறார்கள். அதற்காக டயாலிசிஸ் செய்யும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்கிறார்கள். முகம் கருத்துவிட்டது. அவர் இந்த பூமியில் மேலும் பல்லாண்டு வாழ இறைவன் வழிவகை செய்ய வேண்டும் என மன்சூர் அலிகான் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
யார் இந்த போராளி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த நல்லகண்ணு சிறந்த போராளி. 18 வயதிலேயே கட்சியில் இணைந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக 25 ஆண்டுகள், தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் உரிமை, தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களில் சிறை வாழ்க்கை பல ஆண்டுகள். தமிழகத்தில் 'தோழர் ஆர்.என்.கே' என்று அன்போடு அழைக்கப்படுபவர்.
தலையில் காயம்
அவர் வயது மூப்பின் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி திடீரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
20 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில்..
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 8ஆம்தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுவுக்கு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் கண்காணிப்பு
அங்கு அவருக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் அவரது உடல்நிலை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications