இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோக்கள், படங்கள்.. போலீஸில் புகார் அளித்த நகுல் மனைவி ஸ்ருதி!
சென்னை: நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர்கள் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்வதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பின்னணி பாடகரும் கூட!
தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் படித்த ஸ்ருதியை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பெண் குழந்தை
இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பர். நகுல் தனது மனைவி தண்ணீர் தொட்டியில் குழந்தை (வாட்டர் பர்த்) பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.

சுகபிரசவம்
வலியில்லாமல் சுகப்பிரசவம் மேற்கொள்ளும் இந்த முறை மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவி வருகிறது. பெரும்பாலானோர் இதை விரும்புகிறார்கள். அது போல் நகுலின் மனைவி ஸ்ருதி தனது குழந்தைக்கு பால் குடிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆபாச கருத்துகள்
மேலும் பலர் ஆபாச கருத்துகளை பதிவிட்டனர். அது போல் ஸ்ருதி தான் போடும் கருத்துகளுக்கு மாறாக கிண்டல் செய்து போஸ்ட் போடுவோருக்கு பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் அண்மைக்காலமாக ஸ்ருதியின் இன்ஸ்டாகிராமுக்கு யாரோ மர்மநபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களை அனுப்பி வருவதாக தெரிகிறது.

போலீஸில் புகார்
அது போல் ஆபாச புகைப்படங்களையும் போலி கணக்குகளில் இருந்து அனுப்பி வருகிறார்களாம். இதனை ஸ்ருதி பல முறை கண்டித்தும் அவர்கள் அனுப்புவதை நிறுத்தவில்லை. இதனால் கொதித்த ஸ்ருதி, பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கத்தை பற்றி எப்போதும் தவறான கருத்துகளை பதிவிடுகிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எனினும் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் வருவதை அடுத்து இது குறித்து ஸ்ருதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications