விஜய் சுபாவமே அதுதான்.. டிரெண்டாகும் நெப்போலியன் விடுத்த வார்னிங்.. அப்பவே துல்லியமா சொன்னாரே
சென்னை: விஜய் சுபாவமே அதுதான்.. விஜய் அவருடைய தாய், தந்தையை பக்கத்தில் சேர்க்கவில்லை. அவரது மனைவியை பக்கத்தில் சேர்க்கவில்லை. மகன், மகளை பக்கத்தில் சேர்க்கவில்லை என்று நடிகர் நெப்போலியன் கொடுத்த பழைய பேட்டி கவனம் பெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சங்கீத தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.
விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.
நெப்போலியன் பேட்டி வைரல்
விஜய் அவருடைய தாய், தந்தையை பக்கத்தில் சேர்க்கவில்லை. அவரது மனைவியை பக்கத்தில் சேர்க்கவில்லை என்று நடிகர் நெப்போலியன் கொடுத்த பழைய பேட்டி கவனம் பெற்று வருகிறது.
ஊடகங்களுக்கு நெப்போலியன் அளித்த பேட்டிகளில், உங்க அப்பா (எஸ்.ஏ. சந்திரசேகர்) உங்களை 'செந்தூர பாண்டி' படத்திலிருந்து வளர்த்தவர். உங்களுக்காகக் கதை கேட்டு, கால்ஷீட் பார்த்து உங்களை இவ்வளவு பெரிய நடிகனாக்கினார். அப்படி வளர்த்த தந்தையையே நீங்கள் வீட்டுக்குள் சேர்க்க மாட்டீர்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
விஜய் சுபாவமே அதுதான்.. விஜய் அவருடைய தாய், தந்தையை பக்கத்தில் சேர்க்கவில்லை. அவரது மனைவியை பக்கத்தில் சேர்க்கவில்லை. மகன், மகளை பக்கத்தில் சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கிறதா, சினிமாவில்தானே நீங்கள் இருக்கிறீர்கள் என எல்லோரும் (அமெரிக்காவில்) என்னை கேட்கிறார்கள்.
எப்பா எனக்கு தெரியாதுப்பா என்று சொல்லிவிட்டேன்.. அதெல்லாம் உண்மையாக இருந்தால் எப்படி அவர் உங்களை கவனிப்பார் இதெல்லாம் உண்மையாக இருந்தால் சொந்த குடும்பத்தையே கவனிக்காதவர் எப்படி மக்களை கவனிப்பார் என்ற கேள்வி வரும்தானே?, என்று கோபமாக கூறியது தற்போது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications