சிறைவாசிகளுக்காக சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் மடிப்பிச்சை கேட்ட நடிகர் பார்த்திபன்.. நெகிழ்ச்சி
சென்னை: சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 46 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். புத்தகம் வாசிப்பு என்ற பழக்கத்தை குழந்தை பருவத்திலேயே புகுத்த வேண்டும் என்பார்கள்.
கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்பார்கள். பள்ளிக் கல்வி, கல்லூரி படிப்பு இவற்றை எல்லாம் தாண்டி ஒரு மனிதனை மேலும் அறிவாளியாக்குவது புத்தகம் படித்தலே! பள்ளி, கல்லூரிக்கு செல்லாவிட்டாலும் புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தாலே உலக ஞானத்தை பெற முடியும்.

குறையாத செல்வம்
அள்ள அள்ள குறையாத செல்வம் போல் புத்தக வாசிப்பும் படிக்க படிக்க தெகிட்டாதவை. எனவே புத்தக வாசிப்பு பழக்கம் பள்ளிகளிலேயே ஊக்குவிக்கப்படுகிறது. பள்ளிகளில் லைப்ரரி என்ற ஒரு பாடப்பிரிவு உள்ளது. இதில் அனைத்து குழந்தைகளும் உறுப்பினர்களாகி அவர்கள் அந்த பாடவேளையின் போது அமைதியாக அமர்ந்து புத்தகத்தை படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு வருகிறார்கள்.

அரசியல்வாதிகள்
அதனால்தான் அரசியல்வாதிகள், அறிஞர்கள் என யாரை பார்க்கச் சென்றாலும் புத்தகங்களை பரிசாக தரும் வழக்கம் தொன்று தொட்டு வருகிறது .மாலை, பொன்னாடைக்கு பதிலாக தங்களுக்கு புத்தகத்தை பரிசாக கொடுங்கள் என அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். சந்தைக்கு புதிய புத்தகம் வந்துவிட்டால் உடனே அதை வாங்கி படித்து விடுகிறார்கள்.

புத்தக பிரியர்கள்
அந்த வகையில் புத்தக பிரியர்களுக்காகவே ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இங்கு பல்வேறு புத்தக தயாரிப்பு நிறுவனங்கள் அரங்கங்களை அமைத்து தள்ளுபடி விலையில் புத்தகங்களை கொடுத்து ஊக்குவிக்கச் செய்கிறார்கள். அது போல் இந்த ஆண்டும் புத்தக கண்காட்சி தொடங்கியது.

புத்தகங்கள் விற்பனை
இதில் ஆயிரம் கணக்கில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. புத்தக அரங்குகளுடன் நாளை முதல் நடைபெறும் இந்த கண்காட்சியில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்குமான புத்தகங்கள் அமைந்திருப்பது அவசியம் ஆகும். அது மட்டுமின்றி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

லண்டன்
லண்டன் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றன. இந்த புத்தக கண்காட்சியை நேற்றைய தினம் இயக்குநர் பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று மடிப்பிச்சை கேட்டு புத்தகம் பெற்றார். இது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இந்த வீடியோவும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications