“தெலுங்கு தெரியாது.. ஆனால்..” சாதியை குறிப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்!
சென்னை: கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகர் பார்த்திபன். இந்நிலையில் தற்போது, தான் ஒரு நாயுடு சமூகத்தை சேர்ந்தவன் என்று ஆந்திராவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில், திரையில் திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டபோது பார்த்திபன் ஒரு கருத்தை முன்வைத்தார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, "இந்த குந்தவையை கொஞ்ச நேரம் வீட்டிலேயே 'குந்த' வைப்பது நல்லது; அவர் வெளியே வராமல் இருப்பதே பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்" என்று கிண்டலாக கூறினார்.

பார்த்திபன் - த்ரிஷா சர்ச்சை
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடன், நடிகை திரிஷா சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் விவாதமாகி இருந்த சூழலில், பார்த்திபனின் இந்தப் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பார்த்திபனின் இந்தப் பேச்சுக்கு திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிலடி கொடுத்தார். "ஒரு மைக் கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று நினைப்பது புத்திசாலித்தனம் அல்ல.. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்வது போன்றது. ஒருவரைப் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்த நபரைப் பற்றிச் சொல்வதை விட, பேசுபவரின் தரத்தையே காட்டுகிறது" என்று பதிவிட்டார்.
அதற்கு பதிலாக பார்த்திபனும் தொடர்ந்து இரண்டு வீடியோக்களை வெளியிட்டு விளக்கம் அளித்தார். அந்த வீடியோக்களிலும் அவர் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜாதி பற்றி பார்த்திபன் பேச்சு
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற பார்த்திபன் தனது ஜாதி குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் 'உஸ்தாத் பகத் சிங்'. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் பேசும்போது, "என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்." என்று பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் புரட்சி பேசும் பார்த்திபன், ஆந்திராவில் குறிப்பிட்ட சமூக அடையாளம் குறித்து பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட பார்த்திபன், முற்போக்கு கருத்துகளைப் பேசுபவர். பொது மேடையில் தனது சாதி அடையாளத்தை முன்னிறுத்திப் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications