Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஸ்வரியை சிக்க வைத்த அந்த ஒரு சம்பவம்.. மாட்டிக்கொண்ட டிரைவரும்.. ரஜினி வீட்டில் நடந்தது என்ன?

ரஜினியின் வீட்டில் வேலைக்கார பெண்ணாக சேர்ந்த ஈஸ்வரி பல நாட்களாக கொள்ளையடித்தும் சிக்காத நிலையில் திடீரென சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் வீட்டில் வேலைக்கார பெண்ணாக சேர்ந்த ஈஸ்வரி பல நாட்களாக கொள்ளையடித்தும் சிக்காத நிலையில், திடீரென குறைந்த நாட்களிலேயே வங்கியில் வாங்கிய பல லட்சம் மதிப்பிலான வீட்டுக்கடனை அடைத்தது தான் அவரை சிக்க வைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் நகைகளை திருடிய வழக்கில் சிக்கியிருக்கிறார் ஈஸ்வரி என்ற பணிப்பெண்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யாவின் 60 பவுன் தங்க வைர நகைகள் திருட்டு போன வழக்கில் கைதான ஈஸ்வரி என்ற பெண் திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கியதும், அதற்கு உடந்தையாக ரஜினியின் டிரைவர் இருந்ததும் தெரியவந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் தான் நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அந்த பெட்டியில் இந்த பாரம்பரிய நகைகள் சுமார் 60 பவுனை காணவில்லை. தங்கம் மற்றும் வைர நகைகள் அதில் இருந்திருக்கிறது .

ரகசிய விசாரணை

ரகசிய விசாரணை

இது சம்பந்தமாக ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஒரு மாதமாக எந்த தகவலும் வெளியே தெரியாத அளவிற்கு ரகசிய விசாரணை நடத்தினார்கள். தற்போது தகவல் கசிந்துவிட்டது.

நகைகள் மீட்பு

நகைகள் மீட்பு

இது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேசுகையில், 3 வருடமாக நடந்த விசயம், தற்போது இந்த வழக்கில் வேலைக்கார பெண் ஈஸ்வரி சிக்கி உள்ளார். அவரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளது, மீதி 40 பவுன் நகைகளை மீட்கும் பணி நடக்கிறது என்றார்.

நிலம் ஆவணம்

நிலம் ஆவணம்

இதற்கிடையில் ஈஸ்வரி செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார். ஈஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ரஜினியின் வீட்டில் வேலையில் இருந்து நின்று விட்டார். திருடிய நகைகளை ஒரு பிரபல நகைக்கடையில் விற்று, சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கியதாக தெரியவந்தது. அவருக்கு கணவரும், 3 மகள்களும் இருக்கிறார்கள். வங்கி வாயிலாக பணபரிமாற்றம் செய்த ஆதாரங்களும் கிடைத்ததால் அவர் சிக்கினார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

வேலைக்கார பெண் ஈஸ்வரி திருட்டு லீலைகளில் ஈடுபட்டது குறித்து போலீசார் கூறும் போது, " சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஈஸ்வரி கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். ஈஸ்வரியின் கணவர் பெயர் அங்கமுத்து. அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை.நல்ல பெண் போல நடித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமான ஈஸ்வரி, நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடத்தை தெரியும் அளவுக்கு நம்பிக்கைக்குரியவராக நடித்துள்ளார்.

ஈஸ்வரி எஸ்கேப்

ஈஸ்வரி எஸ்கேப்

ஈஸ்வரி சிறுக சிறுக திருடியதுடன், வங்கியிலும் கடன்வாங்கி அதை வைத்து சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார். அதில் 2 மாடிகளுடன் பிரமாண்ட வீடு கட்டியிருக்கிறார். மாதம் தோறும் அந்த கடனை அடைக்க, ஐஸ்வர்யாவின் நகை லாக்கர் பெட்டியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தங்க-வைர நகைகளை திருடி நகைக்கடையில் விற்று அதில் வந்த பணத்தில் நிலம் வாங்க வாங்கிய கடனை கட்டி இருக்கிறார். பின்னர் பிரச்சனை வருவதற்குள் ஈஸ்வரி வேலையில் இருந்து நின்று விட்டார்.

போலீசார் தகவல்

போலீசார் தகவல்

ஈஸ்வரி நிலம் வாங்கி வீடு கட்டியதற்கான கடனை அடைத்துள்ளார். அதுதான் அவர் சிக்க காரணமாக அமைந்தது. நிலம் வாங்க வாங்கிய கடனை அடைக்க பணம் கட்டிய விவரங்களை வங்கியில் இருந்து பெற்று, அதன் மூலம் தான் நகை திருடிய விவரத்தை கண்டுபிடித்து விட்டோம். ஈஸ்வரியை முறையாக விசாரிக்க ரஜினி குடும்பத்தில் ஒத்துழைப்புக்கு வலியுறுத்தி வருகிறோம். ரஜினி வீட்டில் நடந்த திருட்டை வெளியில் சொல்லாமல் ரகசியமாகவே விசாரித்தோம். தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடக்கவில்லை. எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் வைத்துதான் விசாரணை நடத்தினோம் இப்போது உண்மை வெளியே வந்துவிட்டது. வேலைக்கார பெண் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்ததாக கார் டிரைவர் வெங்கடேசன் என்பவரையும் கைது செய்துளளோம். வெங்கடேசன் நடிகர் ரஜினிகாந்த்திடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஆவார். அவரிடமும் விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+