வடநாட்டு அரசியலில் திருப்பம்! 2027-ல் ரசிகர்கள் கொண்டாட்டம்! ரஜினி சொன்னது என்ன? வைரமுத்து பதிவு
சென்னை: வடநாட்டு அரசியலில் நேரப்படும் திருப்பம் குறித்து ரஜினிகாந்த் பேசியதாக நடிகர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்தும் விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்
'பாசமுள்ள மனிதனப்பா - நான்
மீசவச்ச குழந்தையப்பா'
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்
வியப்புக்குரிய மனிதர்தான்
அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல் இரண்டையும்
அரைநூற்றாண்டாய்க் கடந்து
தன்னிடத்தை ஒருவர்
தக்கவைத்துக் கொள்வது
ஜாதகத்தால் ஆவதல்ல;
சாமர்த்தியத்தால் ஆவது
உணவு முறை
உடல் நிலை குறித்து
ஊடாடிய எங்கள் உரையாடல்
ஊர் சுற்றக் கிளம்பியது
எங்கள் நூறு நிமிட
உரையாடலை
'கிரீன் டீ' கூடக் கெடுக்கவில்லை
தமிழ்நாட்டின் நிகழ்கால
வெப்ப அரசியல் குறித்து
விவாதித்தோம்
ஒவ்வொரு தரவிலும்
அவருக்குள்ள
ஆழமும் தெளிவும் உண்மையும்
என் ஆர்வத்தைத் தூண்டின
வடநாட்டு அரசியல் குறித்தும்
அங்கு நேரப் போவதாக நம்பப்படும்
ஒரு திருப்பம் குறித்தும்
அவர் சொன்னபொழுது
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்
அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்கான
அவரது கலைப்பயணத்தின்
திட்டங்களை விவரித்தார்
2027 ரஜினி ரசிகர்களுக்குக்
கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்;
குறித்துக்கொள்ளுங்கள்
சூப்பர் ஸ்டார்
— வைரமுத்து (@Vairamuthu) January 26, 2026
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்
‘பாசமுள்ள மனிதனப்பா - நான்
மீசவச்ச குழந்தையப்பா’
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்
வியப்புக்குரிய மனிதர்தான்
அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல்… pic.twitter.com/LSkHVQpEXt
அவரிடம்
முதிர்ச்சி தெரிகிறது;
முதுமை தெரியவில்லை
'இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது'
என் தமிழ்
பொய்யாகவில்லை
இவ்வாறு தனது பதிவில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications