3 வது முறை பிரதமராகும் மோடி.. பாராட்டி பேசிய நடிகர் ரஜினி.. ஸ்டாலின் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வேளையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வென்ற ஸ்டாலின் பற்றி அவர் கூறிய வார்த்தை அதிக கவனம் பெற்றுள்ளது.
543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 இடங்கள் தேவை. ஆனால் நேற்று எந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்த்தால் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளன. இதனால் பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மறுபுறம் லோக்சபா தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்களின் ‛இந்தியா' கூட்டணி மொத்தம் 234 தொகுதிகளில் வென்றுள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸ் 99 இடங்களில் வென்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள திமுக தலைமையிலான அணி தமிழகம் மற்றுமு் புதுச்சேரியில்உள்ள 40 தொகுதிகளில் வென்று அசத்தி உள்ளது.
இந்நிலையில் தான் இமயமலை பயணத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். விமானத்தில் சென்னை வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் லோக்சபா தேர்தல் முடிவுகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் 3 முக்கிய தலைவர்களின் வெற்றிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்த திமுக கூட்டணி தலைவர் என்னுடைய அருமை நண்பர் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். அப்படியே என்னுடைய நண்பர் சந்திரபாபுநாயுடு ஆந்திர பிரதேசத்தில் (ஆந்திரா சட்டசபையில் 135 இடங்களில் வெற்றி, லோக்சபாவில் 15 இடங்களில் வெற்றி) பெரிய வெற்றியடைந்துள்ளார். அவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.
மத்தியில் என்டிஏ 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகள்'' என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் பக்கத்தின் வழியாகவும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு சென்று வருகிறார். அந்த கையில் அவர் சமீபத்தில் இமயமலைக்கு சென்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ், பத்ரிநாத் பாபா ஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் விசிட் செய்த நிலையில் தமிழகம் திரும்பிய நிலையில் 3 பேருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications