அக்ரிமெண்ட்.. ’நரேந்திர மோடி’ பற்றி வாயை திறக்க கூடாது..இவர் இயக்கினால் ஓகே..சத்யராஜ் போட்ட லிஸ்ட்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு எனக்கு வரவில்லை எனவும், அப்படி நடித்தால் மணிவண்ணன் இயக்கியிருக்க வேண்டுமென நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் சத்யராஜ். படங்களில் நாயகனாக மட்டுமல்லாது தனது பாத்திரங்களின் வழியே பெரிய சிந்தனைகளையும் பரப்பியவர்.

கிண்டல், கேலி கொண்ட அவரது பாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை. அமைதிப்படை போன்ற ஒரு அரசியல் படத்தை இனி தமிழ் சினிமாவில் எடுக்கவே முடியாது என்னும் அளவுக்கு அந்த படத்தில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பி இருப்பார் சத்யராஜ்.
சத்யராஜ்: மணிவண்ணனின் இயக்கமும், வசனங்களும் இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படமாக இன்று வரை உச்சத்தில் வைத்துள்ளது. இந்த நிலையில் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கட்டப்பா கேரக்டர் மூலம் பிரபலமானார் சத்யராஜ். இதை அடுத்து பல்வேறு தென்னிந்திய மொழி படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் சில படங்களில் நடித்திருந்த சத்யராஜ் தற்போதும் பிஸியாகவே இருக்கிறார்.
நரேந்திர மோடி: இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்றை மையமாக வைத்து விவேக் ஓபராய் நடித்திருந்த பிஎம் நரேந்திர மோடி, மன் பைரகி, மோடி தி ஜர்னி ஆப் காமன் மேன், மோ ககா கா கவுன் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் அறிவிப்பு: இந்த நிலையில் தற்போது புதிதாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. பாலிவுட்டில் தயாராகும் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை என்ன?: இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு எனக்கு வரவில்லை என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்," நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.. படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனங்கள் தான் சொல்ல வேண்டுமென அக்ரிமெண்ட் உள்ளது. அதனால் படங்கள் குறித்து சொல்ல முடியாது.
இயக்குனர் யார்?: கருப்பு சட்டை போட்டுள்ள நீங்கள் காவி சட்டை போட்டவர் பாத்திரத்தில் நடிக்கவுள்ளீர்களே என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர்," பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு எனக்கு வரவில்லை. பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்றால் என் நண்பர் மணிவண்ணன் இயக்கினால் அருமையாக இருக்கும். இல்லையென்றால் மாரி செல்வராஜ் , பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கினால் மிக அருமையாக இருக்கும்" என பதிலளித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications