வடநாட்டில் இருந்து வருவது மதப்புயல் அல்ல, மடப் புயல்.. அது வேலைக்கே ஆகாது.. நடிகர் சத்யராஜ் கிண்டல்
சென்னை: வட மாநிலத்தில் இருந்து மதப்புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்ராதீங்க என்று கூறுகிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வடமாநிலத்தை பொறுத்தவரை தான் மதப்புயல்.. தமிழ்நாட்டில் அது மடப்புயல் தான் என்று கிண்டலடித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
முதல்வர் மு.க ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. திமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னாலே உற்சாகம் பிறக்கிறது என்று சொன்னார் சத்யராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், வட மாநிலத்தில் இருந்து மதப்புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்ராதீங்க என்று கூறுகிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வடமாநிலத்தை பொறுத்தவரை தான் மதப்புயல்.. தமிழ்நாட்டில் அது மடப்புயல் தான். ஏனெனில் இங்கு எல்லா மதங்களை சேர்ந்தவரும் அண்னன் தம்பி போல் பழகிக்கொண்டிருக்கிறோம்.. இங்கு வந்து மதத்தை வைத்து அரசியல் செய்யவே முடியாது.
அதனால் தான் அது மதப்புயல் அல்ல, மடப்புயல் என்று சொல்கிறேன். இங்கு எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் அவ்வளவு ஒற்றுமையாக நண்பர்களாக இருக்கிறோம். இங்கு எப்படி மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியும்.
நம்மை படிக்கவிட கூடாது என்று பல தடைகளை உருவாக்கினர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம். இன்று தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிய அளவில் வந்து விட்டனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்று சொன்னார் நடிகர் சத்யராஜ்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications