பலே பாண்டியா..’பகுத்தறிவு’ சூரியை பாருங்க! இதே மாதிரி மற்ற நடிகர்கள் செய்யணுமே! வைரமுத்து பெருமிதம்!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதாக செய்தி வெளியான நிலையில் அதனை கண்டித்து இருந்தார் நடிகர் சூரி.இந்த நிலையில் ரசிகர்களை பகிரங்கமாக சாடி இருப்பதை வரவேற்றுள்ள கவிஞர் வைரமுத்து, இதேபோல மற்ற நடிகர்களும் செய்தால் கலைத் துறை மேம்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.
தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சூரி.வெண்ணிலா கபடி குழு படம் அவருக்கு மிகப்பெரிய சிறப்பு முனையை கொடுத்தது. பரோட்டா காமெடி மூலம் புகழ்பெற்ற அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
தொடர்ந்து விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்த அவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு கை கொடுத்த நிலையில் இனி நாயகனாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதை மற்றும் நடிப்பில், மாமன் திரைப்படம் நேற்று வெளியானது. சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மாமன் படம் வெற்றி அடைய வேண்டி அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு வருத்தம் தெரிவித்து இருந்தால் நடிகர் சூரி.
இது தொடர்பாக பேசிய அவர்," படம் வெற்றி அடைய, என்னுடைய கவனத்தை கவர்வதற்காகவோ மண் சோறு சாப்பிடுவது மிகவும் தவறான செயல். கதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி அடையும். மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா? முட்டாள்தனமாக மண் சோறு சாப்பிட வேண்டாம் தம்பிகளே. எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கு. நான் சாப்பிட கூட முடியாமல் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். சோற்றை மதிக்காதவர்கள் எனது ரசிகர்களாக தம்பிகளாக இருக்கக் கூடாது. அந்த பணத்தை வைத்து வேறு யாருக்காவது சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயல்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரசிகர்களை வெளிப்படையாக கண்டித்த நடிகர் சூரியை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். மேலும் மற்ற நடிகர்களும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலை மேலும் மேம்பட்டிருக்கும் எனக் கூறியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்.
மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள், தன் ரசிகர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்குத்
துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். மண் சோறு தின்றால் ஓடாது. மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை 'பலே பாண்டியா' என்று பாராட்டுகிறேன்." என கூறியுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications