துபாயில் இருந்து சென்னை வந்ததுமே! பார்ட்டி வைத்த ஸ்ரீகாந்த்! போலீஸுக்கு கிடைத்த திடுக் தகவல்!
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவர் வேறு யாருக்கெல்லாம் போதை பொருளை சப்ளை செய்துள்ளார், வேறு யாரிடமாவது போதை பொருளை வாங்கியிருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் புழல் சிறையில் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
என் வீட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. என் மகனை நான் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல மாட்டேன் என உறுதி அளித்து ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது ஸ்ரீகாந்தின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. அதாவது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து ஸ்ரீகாந்த் 250 கிராம் கொக்கைன் வாங்கியதாக தெரிகிறது.
அது போல் துபாயிலிருந்து திரும்பிய ஸ்ரீகாந்த் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் பார்ட்டி நடத்தியதாகவும் அந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பிரசாத் தற்போது சிறையில் இருக்கும் போது சனிக்கிழமை நடந்த பார்ட்டிக்கு ஸ்ரீகாந்த் யாரிடம் போதை பொருள் வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications