Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைதான போது அதிமுகவினரும் அழுதனரே.. நடிகர் தம்பி ராமையா பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் அழுத போது ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் விட்டது என நடிகர் தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா கடந்த மார்ச் 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Actor Thambi Ramaiah visited CM photo exhibition in Coimbatore

இந்த கண்காட்சி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை ரஜினிகாந்த் பார்வையிட்டு பாராட்டினார். ஒரு சில படங்களை கண்டு வியந்தார்.

இந்த புகைப்பட கண்காட்சியை பிரபலங்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் இளமை பருவம், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் கடந்து வந்த பாதை, மிசாவில் கைதான சிறை அனுபவங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் எல்லாம் இந்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரபலங்கள், பொதுமக்கள் என பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய கண்காட்சியில் நகைச்சுவை நடிகர் சூரி பார்வையிட்டார். இதையடுத்து சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

Actor Thambi Ramaiah visited CM photo exhibition in Coimbatore

அப்போது அவர் கூறுகையில் நாமெல்லாம் 14 வயதில் கண்மாயில் ஓடியாடி விளையாடி வந்தோம். ஆனால் அந்த வயதில் ஸ்டாலின் என்ற மாணவர் கட்சிக்காக பிரச்சாரம் செய்து 15 வயதில் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி 20 வயதில் பொதுக் குழு உறுப்பினராக பதவி வகித்து அதற்கு பின்பு அரசியல் பயணத்தில் எதிர்பாராத இன்னல்களை கடந்து வந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என கூறி அவர் பதவியை தக்க வைத்து தற்போது முதல்வராக அமரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் என பாராட்டியிருந்தார். அது போல் மதுரையில் நடந்த இந்த கண்காட்சியை நடிகர் விஜய் சேதுபதியும் பார்வையிட்டார். அவர் கூறுகையில் முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நம்மை ஆண்டவர்கள் பற்றி தெரிய வருகிறது.

கண்காட்சியை பார்க்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முதல்வர் குறித்த ஒரு புரிதல் ஏற்படும். நம் முதல்வர் 70 ஆண்டு கால அரசியலில் எப்படி முன்னுக்கு வந்தார் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என பேசியிருந்தார். தற்போது இந்த புகைப்பட கண்காட்சி கோவையில் தொடங்கியுள்ளது. கோவை வஉசி மைதானத்தில்தான் இது அமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தமிழக முதல்வரின் புகைப்பட கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்ட நடிகர் தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். தம்பி ராமையா பேசுகையில் வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகங்களில் படித்திருக்கிறோம். பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம்.

ஆனால் வாழும் தலைவர் ஒருவருடைய வரலாற்றை கண்முன்னால் பார்ப்பது என்பது மிகப் பெரிய கொடுப்பனை. இந்த 7 நாட்களும் இந்த கண்காட்சியை பார்த்தவர்கள் எல்லாம் ஒரு சுகமான காட்சியை பார்த்ததாகத்தான் சொல்வார்கள். ஒரு இரவில் இருந்து விட்டு மறு இரவில் காணாமல் போவது வெற்றி அல்ல. ஒரு இடத்தில் அழுத்தம் திருத்தமாக வந்து அமர்வதற்கு மிகப் பெரிய தியாகம் இருக்க வேண்டும்.

கண்ணீர் விட்டிருக்க வேண்டும். துன்பங்களை அனுபவித்து இருக்க வேண்டும். குடும்பத்தை நேசி்கிற ஒரு பண்பு இருக்க வேண்டும். இந்த கண்காட்சியை பார்க்கும் போது தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல. இந்த கண்காட்சியில் நிறைவு பகுதி வரும் போது எனக்கே ஒரு நெகிழ்வு ஏற்படுகிறது. கருணாநிதியை அதிமுக ஆட்சியில் கைது செய்த போது அதிமுகவினரும் அழுதார்கள்.

அது போல் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கிடைத்துவிட்டது என்ற போது தமிழகமே அழுதது. ஞான நிலை எட்டிய வயதில் தமிழக முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும். இவ்வாறு தம்பி ராமையா பேசியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+