நிர்வாணமாக மரம் ஏறிய பிரபல தமிழ் நடிகர்.. அஜித் + விஜய் + சூர்யா படங்களில் நடித்தவரின் வீடியோ வைரல்
சென்னை: தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர் வித்யூத் ஜாம்வால், உடலில் ஒட்டுத்துணியின்றி மரத்தில் ஏறி, இறங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். மேலும் அதனை செய்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் வித்யூத் ஜாம்வால். ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். இவருக்கு வயது 45. கட்டுமஸ்தான உடல் கொண்டுள்ளதால் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருகிறார்.

தமிழ் திரைப்படங்களை எடுத்து கொண்டால் நடிகர் அஜித்குமாரின் பில்லா II, நடிகர் விஜயின் துப்பாக்கி, நடிகர் சூர்யாவின் அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
அஜித்தின் பில்லா II திரைப்படத்தில் டிமிட்ரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதேபோல் நடிகர் விஜயின் துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் தலைவராகவும், அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நண்பனான சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில் தான் நடிகர் வித்யூத் ஜாம்வால் தான் ஆடையின்றி மரத்தில் ஏறி இறங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் உடலில் ஆடைகள் ஏதுவும் இன்றி அவர் மரத்தில் ஏறி இறங்குகிறார். இதுதொடர்பாக அவர் அந்த பதிவில் விளக்கமும் அளித்துள்ளார்.
அதில், ‛‛களிரிபயட்டு கலையின் பயிற்சியின் ஒருபகுதியாக ஆண்டுதோறும் சஹஜ யோகா பயிற்சியில் ஈடுபடுகிறேன். சஹஜம் என்பது இயற்கையுடன் எளிமையான உள்ளுணர்வு நிலைக்கு திரும்புவதாகும். இது இயற்கை மற்றும் மனதுக்கு இடையே ஆழமான தொடர்பை வளர்க்கிறது.
அறிவியல் ரீதியாக பார்த்தால் பல நரம்புகளை உணர்ச்சி ரீதியாக தூண்டி மேம்படுத்துகிறது. மனதில் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக்க வழிவகுக்கிறது. அதோடு மனதை ஒருமைப்படுத்துவதற்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கிறது'' என கூறியுள்ளார்.
நடிகர் வித்யூத் ஜாம்வால் கற்று வரும் களரிபயட்டு கலைக்கு இன்னொரு பெயர் உள்ளது. அது தான் களிப்பயிற்று. இது ஒரு தற்காப்பு கலையாகும். போர் சமயத்தில் எதிரிகளை தாக்குதவது, எதிரிகளிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்வது உள்ளிட்டவற்றுக்கு இந்த கலை பயன்படும்.
இந்த கலை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வழக்கத்தில் இருந்தது. இப்போது கேரளாவில் மட்டும் உள்ளது. வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்றவற்றை பயன்படுத்தி பயிற்சி எடுப்பார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications