இன்று தேய்பிறை அஷ்டமி! நாள் நட்சத்திரம் நல்ல நேரம் பார்க்காமல் பெரியார் வழியில் விஜய் பயணம்!
சென்னை: தேய்பிறை அஷ்டமி நாளான இன்று தனது கட்சி பெயரை அறிவித்து, நாள் நட்சத்திரம் நல்ல நேரம் பார்க்காமல் பெரியார் வழியில் பகுத்தறிவு பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய்.
விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக அவதாரமெடுக்கும் தகவலை இன்று காலை தான் ஒன் இந்தியா தமிழ் தனிச் செய்தியாக பதிவு செய்திருந்தது. அதேபோல் ''வேகமெடுக்கும் விஜய் மக்கள் இயக்கம்! கட்சிப்பதிவு,மாநாடு என நிர்வாகிகள் பாய்ச்சல்! ஸ்ட்ராங் ஐடி விங்!'' என்ற தலைப்பில் 2 நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியிட்டோம். நாம் கூறியதை போலவே காலம் பூரா தன்னை நம்பியிருப்பவர்களை காக்க வைக்க விரும்பாமல் அதிரடியாக ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள அவர், இதற்காக நாள், நட்சத்திரம் பார்க்கவில்லை. நல்ல நேரம் பார்க்கவில்லை. பெரியார் காட்டிய பகுத்தறிவு பாதையில் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். இந்தக் காலத்தில் பகுத்தறிவுக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளே நாள் நட்சத்திரம் பார்த்து தான் அறிவிப்புகளை வெளியிடுகின்றன. நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
ஆனால் விஜய் எடுத்த எடுப்பிலேயே சடங்கு சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து கவனம் ஈர்த்துள்ளார். பொதுவாக அரசியல் கட்சியின் பெயரை வளர்பிறை சுப முகூர்த்த தினத்தில் தான் அறிவிப்பார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக விஜய் தேய்பிறை அஷ்டமி நாளில் கட்சி பெயரை அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னை பகுத்தறிவுவாதியாகவும், சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் காட்டியிருக்கிறார்.
பெரியார், அம்பேத்கர், போன்ற தலைவர்களின் புத்தகங்களை படிக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசும் போது கூறியது குறிப்பிடத்தக்கது. ஊழல், மத அரசியலுக்கு எதிரான கொள்கை கோட்பாடுகளை விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications