முழு வேகத்தில் களத்தில் இறங்க தயாராகும் விஜய்! தவெக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் முழு கவனத்தை செலுத்த ரெடி ஆகி வருகிறது. இன்று கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மாநாடு, பொதுக்குழு, போராட்டம் என கட்சிகளின் அரசியல் செயல்பாடுகள் சூடுபிடித்துள்ள நிலையில், தவெகவும் தனது பணிகளை துரிதப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

மதுரையில் இந்து முன்னணி நடத்திய 'முருக பக்தர்கள்' மாநாடு, திருச்சியில் விசிக நடத்திய, 'மதச்சார்பின்மையை பாதுகாப்போம்' பேரணி பொதுக்கூட்டம், சிபிஎம் மதுரை அகில இந்திய மாநாடு, திமுக தீவிரப்படுத்தியுள்ள மக்கள் சந்திப்பு இயக்கம் என அரசியல் கட்சிகள் வேகமாக செயல்பட்டு வருகின்றன.
எனவே தமிழக வெற்றிக் கழகமும் தனது அரசியல் செயல்பாடுகளை முடுக்கிவிட திட்டமிட்டிருக்கிறது. இதற்கான திட்டமிடல் என்ன? எங்கிருந்து தொடங்குவது? உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க மாநில செயற்குழு கூட்டத்தை தவெக இன்று நடத்தியது.
இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். முதற்கட்டமாக தஞ்சாவூரில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மேற்கொள்ள கட்சி திட்டமிட்டிருக்கிறது. தஞ்சை தொடங்கி 100 இடங்களில் விஜய் மக்களை சந்திக்க இருக்கிறார். தஞ்சை என்பது நல்ல தொடக்கமாக தெரிந்தாலும், கொஞ்சம் சவால் நிறைந்த இடம். பொதுவாக டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகம். இங்குள்ள தலித் மக்களுக்காக இந்த இரு கட்சிகளும் போராட்ட களத்தி நின்றிருக்கின்றன.
எனவே இயல்பாக இரு கட்சிகளின் கோட்டையாக டெல்டா இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த அரசியலை மீறி விஜய்யின் அரசியல் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் தாக்க்தை ஏற்படுத்துமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
விஜய்யின் கொள்கைகளில் பெரிய அளவுக்கு தெளிவு இல்லை என்றும், வொர்க் பிரம் ஹோம் அரசியல் கட்சி என்றும் விமர்சிக்கிப்பட்டு வரும் தவெக இந்த சாவல்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரம் இளைஞர்கள் மத்தியல் விஜய்யின் முகம் நன்கு பரிட்சயம் என்பதால் பிரசாரத்திற்கோ, கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதை வாக்குகளாக மாற்றுவதற்கோ எங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று தவெகவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
மட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களில் கிராமம், கிராமமாக சென்று மக்களின் குறைகள் என்ன என்பதை கேட்றிய தொடங்கியிருக்கிறார்கள். நேரடியாக மாவட்ட செயலாளர் இந்த பணிகளை தலைமையேற்று நடத்தி வருகிறார். என்னதான் டெல்டா திமுக, இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தாலும், இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கத்தானே செய்கிறது? அதை கையில் எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்று நிர்வாகிகள் நம்பிக்கை தெரித்திருக்கின்றனர்.
இந்த நம்பிக்கை தேர்தல் வெற்றி அளவுக்கு கை கொடுக்குமா? அல்லது வழக்கம் போல தேர்தல் அரசியல், அரசியல் தலைவர்களுக்கு ஷாக் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபொல இன்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் வேறு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications