கிறிஸ்தவர் என விமர்சித்த பாஜக! கட்சி தொடங்கி குட்டு வைத்த நடிகர் விஜய்! போட்டோவை கவனீச்சிங்களா!
சென்னை: தன்னை கிறிஸ்தவர் என்றும், தனது பெயர் ஜோசப் விஜய் என்றும் விமர்சனம் செய்த பாஜகவின் எச் ராஜா மற்றும் இந்து அமைப்புகளுக்கு நடிகர் விஜய் கட்சி தொடங்கி சைலன்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார். அப்படி என்ன செய்துள்ளார் நடிகர் விஜய்? வாங்க பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். சமீபகாலமாக இவரது செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டினார். அதன்பிறகு நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளத்தால் மூழ்கிய நிலையில் நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.

முன்னதாக நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகள் குறித்த முழு விபரங்களை அவர் சேகரித்தார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்குள் நுழையலாம் என்ற பேச்சுக்கள் எழுந்தன. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி அரசியலுக்குள் நுழைவதை உறுதி செய்துள்ளார். அதாவது இன்று நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‛தமிழக வெற்றி கழகம்' (Tamilaga Vettri Kazhagam) என நடிகர் விஜய் தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். இதன் தலைவராக நடிகர் விஜய் உள்ளார்.
இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி தன்னை கிறிஸ்தவர் என விமர்சனம் செய்த பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா மற்றும் இந்து அமைப்பினர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நடிகர் விஜய் ‛மெர்சல்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது அந்த படத்தில் ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் சில நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த வேளையில் பாஜக மூத்த தலைவர் நடிகர் விஜயை, ‛ஜோசப் விஜய்' என கூறி விமர்சனம் செய்தார். அதாவது விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால் தான் மத்திய அரசை விமர்சனம் செய்கிறார் எனும் வகையில் எச் ராஜா கருத்து தெரிவித்து இருந்தார்.
அதேபோல் பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் நடிகர் விஜயை விமர்சனம் செய்திருந்தனர். மேலும் விஜய் தனது கிறிஸ்தவ அடையாளளமான ஜோசப் என்ற பெயரை பயன்படுத்தாமல் விஜய் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்து இருந்தனர். இதற்கு நடிகர் விஜய் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. ஆனாலும் இந்த விமர்சனத்துக்கு பிறகு நடிகர் விஜய் தொடர்பான சில அறிவிப்புகளில் அவரது பெயர் ஜோசப் விஜய் என இடம்பெற்று கவனம் ஈர்த்தது. அதாவது எனது பெயர் ஜோசப் விஜய் தான். இதனை மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என நடிகர் விஜய் பதிலடி கொடுக்கும் வகையில் இப்படி செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது நடிகர் விஜய் தனது கட்சி தொடங்கியதன் மூலம் தன்னை கிறிஸ்தவர் என விமர்சனம் செய்தவர்களுக்கு குட்டு வைத்துள்ளார். அதாவது விஜய் கட்சி தொடங்கிய விஷயத்தை ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயர் அடங்கிய லெட்ட்ர்பேடில் அறிக்கையாக வெளியிட்டு அறிவித்து இருந்தார். அந்த அறிக்கையில் விஜயின் போட்டோ இடம்பெற்றிருந்தது. அந்த போட்டோவில் விஜயின் நெற்றியில் குங்குமம் இருந்தது. குங்குமத்தை நெற்றியில் பொட்டு மற்றும் திலகமாக இந்துக்கள் தான் வைப்பார்கள். தற்போது விஜய் தனது நெற்றியில் குங்குமம் வைத்து இருக்கும் போட்டோ அவரது கட்சியின் லெட்டர்பேடில் இருப்பதன் மூலம் பாஜகவினருக்கு அவர் குட்டு வைத்துள்ளார்.
மேலும் அவர் தனது கட்சி பெயரின் அருகே, ‛பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திருக்குறள் வரியை இணைத்துள்ளார். இதற்கு அர்த்தம் என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்பதே. இதுவும் தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் வைத்துள்ளார்.
மேலும் பாஜக என்பது மதத்தின் அடிப்படையில் பிரிவினைவாத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதோடு அனைத்து கட்சிகளும் சாதியின் அடிப்படையிலான அரசியலை முன்னெடுப்பதாகவும் பொதுவான பேச்சு உள்ளது. இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். இதற்காக கட்சியை தொடங்குகிறேன்'' என 4 பக்க அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். இதன்மூலம் சாதி, மத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளையும் நடிகர் விஜய் விடாமல் விமர்சித்து கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications