விஜய் கொடுத்த “டுவிஸ்ட்”.. திருவள்ளுவருடன் தொடங்கும் அரசியல் ஆட்டம்! கல்வி விருது விழா பேனரா.. ஆஹா
சென்னை: நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசளிக்கும் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியின் மேடையில் வைக்கப்பட்டு உள்ள பேனரில் இரு புறமும் திருவள்ளுவரின் படங்கள் உள்ளன.
நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்க மறுபக்கம் புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக அரசியலுக்கு அடித்தளம் அமைத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கி தேர்தலில் ஆழம் பார்த்தார்.

அதன் தொடர்ச்சியாக மக்கள் இயக்கத்தின் மூலம் அவ்வப்போது சில பணிகளை விஜய் மேற்கொண்டு வந்தார். தனது மக்கள் இயக்க நிர்வாகிகளையும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார். வாரிசு பட வெளியீட்டுக்கு முன் ரசிகர்களை அழைத்து பேசி விருந்து வழங்கிய விஜய், தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருக்கும் விஜய், இன்னும் வேகமாக அரசியல் பணிகளை நகர்த்தி வருவதை அவரது அண்மை கால செயல்பாடுகள் காட்டுகின்றன.
குறிப்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த நடிகர் விஜய் ரசிகர்களை கேட்டுக்கொண்டு இருந்தார். அதற்கு ஏற்ப தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது அம்பேத்கரை வைத்து விஜய் அரசியலை தொடங்குவதாக விவாதங்கள் எழுந்தன. ஆனால், அதன் தொடர்ச்சியாக தீரன் சின்னமலை, காயிதே மில்லத், சிவந்தி ஆதித்தனார், பாரதிதாசன் போன்றோரின் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் ரமலான் மாதம் இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்து இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தினர்.
அதேபோல், உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு வேளை (மதியம்) உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில்தான் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய் நேரில் பரிசுகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியானது. முன்னதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினியை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

இதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது! "தளபதி விஜய்" அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த "பத்து மற்றும் பணிரெண்டாம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
பொதுவாக கல்வி மாவட்ட அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயோ தொகுதி அளவில் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்குவது அரசியலுக்கான ஆயத்தம் என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் காலை இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அரங்கம் முழுவதும் பெற்றோர்கள், மாணவர்கள் நிரம்பி உள்ளனர். விழா மேடையில் இரு பக்கமும் திருவள்ளுவர் சிலையின் படங்களே வைக்கப்பட்டு உள்ளன. வேறு எந்த தலைவரின் படமும் அதில் இடம்பெறவில்லை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்












Click it and Unblock the Notifications