'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு
Recommended Video
சென்னை: சென்னையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு (வேலூரை தவிர) இன்று மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள சென்னை தொடக்க பள்ளிக்கு சென்று வாக்களித்தார். இதேபோல் நடிகர் ரஜினி காந்த் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லி மேரிஸ் கல்லூரியில் ஆர்வமுடன் வாக்களித்தார்.

இதேபோல் நடிகர் விஜய் காலை 7.30 அளவில் சென்னை அடையாறு காமராஜனர் அவென்யூவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது வாக்களிப்பதற்காக மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார்.
பின்னர் வாக்கச்சாவடிக்குள் சென்று வாக்களித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications