தங்கலான் சக்ஸஸ் மீட் விருந்து! மாதம்பட்டி சமையல் குழுவுக்கு நடிகர் விக்ரம் போட்ட ஒரு நிபந்தனை!
சென்னை: தங்கலான் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் சியான் விக்ரம், படக்குழுவினருக்கு விருந்து படைத்தாராம். அந்த விருந்தில் முக்கியமான ஒரு விஷயத்தை சியான் வலியுறுத்தினாராம். அது போல் விருந்தில் மெனுக்களுக்கான சில இன்புட்ஸை கொடுத்தது யார் தெரியுமா?
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று (ஆகஸ்ட் 30ஆம் தேதி) இந்த திரைப்படம் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகி வெற்றி கிடைத்ததை அடுத்து விக்ரம் ஒரு சக்ஸஸ் பார்ட்டியை படக்குழுவுக்கு வைத்திருக்கிறார். அந்த விழாவில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கு மாதம்பட்டி பாகஷாலாவில் இருந்து மாதம்பட்டி தங்கவேலு குழுவினர் அறுசுவை விருந்தை படைத்தனர். இதில் வரவேற்பு பானமாக வாட்டர்மெலான் ஜிஞ்சர் ஜூஸும், பைன்ஆப்பிள் மேங்கோ மின்ட் ஜூஸும் வழங்கப்பட்டது. இனிப்பு பூசணிக்காய் அல்வா, இளநீர் பாயாசம் பரிமாறப்பட்டது.
அது போல் மட்டன் சாப்ஸ், கறிவேப்பிலை வஞ்சிரம் மீன் பிரை, இறால் நெய் ரோஸ்ட், ஈரோடு சிறப்பு பிச்சு போட்ட கோழி மிளகு வறுவல், சிக்கன் குழம்பு கலக்கி, வெஜ் மட்டன் சாப்ஸ், வெஜ் ஃபிஷ் ஃபிரை, ஜலபினோ சீஸ் சமோசா- சாஸ் ஆகியவை ஸ்டார்ட்டர்ஸாக பரிமாறப்பட்டது.
அது போல் விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிப்பாளையம் கிரேவி- மஷ்ரூம் பள்ளிப்பாளையம் கிரேவி, ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் சிக்கன் தம் பிரியாணி- ரைதா, மினி பன் தோசை, தேங்காய் சட்டினி, ஆந்திரா மீன் குழம்பு, சைவ மீன் குழம்பு, மிளகு ரசம், அப்பளம், மாங்காய் ஊறுகாய் ஆகியவை பிரதான உணவாக வழங்கப்பட்டது.
அது போல் இறுதியாக சுலைமான் டீ, ஐஸ்கிரீம், பீடா ஆகியவையுடன் விருந்து முடிந்தது. இந்த விருந்து 600 பேருக்கு வழங்கப்பட்டது. படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் கலந்து கொண்டனர். 500 பேருக்கு அசைவமும் 100 பேருக்கு சைவமும் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் நடிகர் விக்ரம், சமையல் குழுவிடம் ஒரு விஷயத்தை ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

அதாவது அனைத்து குழம்புகளும் சிறுவாணி ஆற்று தண்ணீரில்தான் வைக்க வேண்டும் என்பதுதான் அவரது நிபந்தனையாம். அது போல் இந்த மெனுக்களில் சில இன்புட்களை விக்ரம் மனைவி சைலஜா வழங்கினாராம். பொதுவாகவே அந்தந்த ஊர் தண்ணீருக்கென தனி ருசி இருப்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில்தான் திருநெல்வேலி அல்வாவுக்கு தனி ருசி உள்ளது. அது போல் மாதம்பட்டி குழுமம் சமைக்கும் சமையலில் கூட கோவை சிறுவாணி ஆற்று தண்ணீரை முறையான உரிமம் பெற்று பயன்படுத்துகிறார்களாம். அதனால்தான் அவர்களுடைய உணவுக்கு அத்தனை ருசி இருப்பதாக சொல்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications