எல்லாம் வக்கிரம்.. திருமாவளவன் செய்தது என்ன? சர்ச்சையான வீடியோ குறித்து.. நடிகை அகிலா விளக்கம்!
சென்னை; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன் மேடையில் பேசும் வீடியோ ஒன்று வைரலானது குறித்து சீரியல் நடிகை அகிலா விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் நடிகை அகிலா கலந்து கொண்டார். அந்த மருத்துவமனையை திறந்து வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் .. அகிலா பேசும் போது.. அவரின் பேச்சை கவனித்தபடி இருந்த வீடியோ சர்ச்சையானது. இதை நெட்டிசன்கள் பலர் தவறான அர்த்தத்தில் பரப்பி வந்தனர்.
அகிலா விளக்கம்: இந்த வீடியோ தொடர்பாக அகிலா விளக்கம் அளித்துள்ளார். அதில், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டா உள்ளிட்ட வலைத்தளங்களில் என்னுடைய வீடியோ டிரென்டாகி வருகிறது. இதை பார்த்து விசிகவில் அகிலாவா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. தனியார் மருத்துவமனை நிகழ்ச்சிக்கு நான் சென்று இருந்தேன்.

அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் தோழர் அண்ணன் தொல் திருமாவளவன். அந்த நிகழ்ச்சியில் நான் அவருக்கு வரவேற்பு உரை கொடுத்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி கூறி அவருக்கு அழைப்பு விடுத்தேன் .
கடும் கண்டனம்: அவர் சிறப்பு விருந்தினர். சிறப்பு விருந்தினர் அமர்ந்து இருக்க வேண்டும். நான் நின்றபடி அழைக்க வேண்டும் என்பதே விதி. ஆனால் அங்கே கூட்டமாக இருந்தது. திருமா அண்ணன் உடனே பேச வேண்டும் என்ற நிலை இருந்தது. அவர் பேச வேண்டும் என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருந்தனர். அதற்காக நானும் அப்படியே கூப்பிட்டுவிட முடியாது. திருமா அடுத்து பேசுவார் என்று நான் சொல்லிவிட முடியாது. அவர் சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக போராடும் நபர் .
மக்களுக்காக குரல் கொடுக்கும் மாமனிதர். இப்போது அவர் லோக்சபா எம்பியாகவும் இருக்கிறார். அதனால் அவருக்கு நீண்ட இன்ட்ரோ கொடுத்து அழைத்தேன். அவரை பற்றி நான் நீண்ட நேரம் பேசியதை .. வியந்தபடி திருமா பார்த்துக்கொண்டு இருந்தார். ஆனால் அதை போய் வேறு விதமாக மாற்றி.. களங்கப்படுத்தும் விதமாக பேசுகிறார். அதை பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது.
வக்கிரபுத்தி: இந்த மாதிரி விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஒருவரை களங்கப்படுத்தும் விதமாக பேச கூடாது. அவர் பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். ஆனால் இவர்கள் செய்யும் போஸ்ட் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது. பல நல்ல காரியங்களை செய்தவர்களை பற்றி பாசிட்டிவாக.. அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் பற்றி பேச வேண்டும்.
நல்ல விஷயங்களை பேசாமல் இப்படி வக்கிரத்தோடு பேச கூடாது. என்னுடைய உடை கலர்.. என் பேச்சை வைத்து நான் விசிகவில் சேர்ந்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். நான் அரசியலில் இல்லை. நான் சாதாரண ஆள். நான் எந்த காட்சியிலும் இணையவில்லை.
— சிறுத்தை சிவா தாழை ★ (@Sivaa_Comrade) December 14, 2023
இப்படி செய்யாதீர்கள்: எனக்கும் எந்த கட்சிக்கும் தொடர்பு கிடையாது. அந்த மருத்துவமனை நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டோம் எவ்வளவோ. உங்களுடைய அரசியல் காழ்புணர்ச்சிக்காக ஒரு பெரிய அரசியல் தலைவர் நீங்கள் களங்கப்படுத்துகிறீர்கள். ஒரு ஆணை களங்கப்படுத்துகிறீர்கள் என்பதற்காக கூடவே அங்கே உள்ள ஒரு பெண்ணையும்.. அவரின் மாண்பையும் களங்கப்படுத்துகிறீர்கள். அது பெரிய தவறு. அப்படி செய்ய கூடாது.
அப்படி பேசுவது பெரிய தவறான விஷயம். இதை எல்லாம் செய்யாதீர்கள். இப்படி செய்வதால் ஒரு மனிதரையும்.. கூட நிற்கும் பெண்ணையும் நீங்கள் அசிங்கப்படுத்துவதாக நினைக்க வேண்டாம் உங்களுடைய வக்கிர புத்தியை இது காட்டுகிறது. ஒரு நபரை நீங்கள் கொள்கை ரீதியாக எதிர்க்க முடியவில்லை என்றால்.. இப்படி அசிங்கம் செய்வீர்களா? உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையும் நீங்கள் அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம், நடிகை அகிலா கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications