எனக்கு மாற்றுத் திறனாளி மகன் இருக்கான்.. நான் இல்லாமல் என்ன செய்வான்! கைதின் போது கலங்கிய கஸ்தூரி
சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத் அருகே கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போலீசார் கைது செய்ய சென்றபோது கஸ்தூரி கதவை திறக்காமல் இருந்ததாகவும், கைதுக்கு பின் மகனை நினைத்து கண்கலங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிராமணர்கள் சங்கத்தின் சார்பாக பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்க தனி சட்டம் இயற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கஸ்தூரி பேசியது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் தெலுங்கு சமுதாய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளித்தனர்.
தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு, நாயுடு மகாஜன சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புகார் அளித்தன. குறிப்பாக சென்னை எழும்பூர், மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சென்னை போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க சென்றனர்.
ஆனால் வீட்டை பூட்டி விட்டு கஸ்தூரி தலைமறைவானார். இதை எடுத்து அவரை கைது செய்ய போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது, தெலுங்கு பேசினாலும் அந்த மக்களும் தமிழகத்தின் ஒரு பகுதியினர் தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தார். மேலும் கஸ்தூரியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து பப்பலகுண்டாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருந்த அவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் கணவர் ஆதரவில்லாமல் தான் தனிமையில் வசித்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளி மகன் உள்ளதாகவும், அவன் ஹைதராபாத்தில் படித்து வரும் நிலையில், தான் அங்கே இருந்ததாகவும் தலைமறைவு ஆகவில்லை எனக் கூறியிருந்தார்.
மேலும் தன்னை சிறையில் அடைத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் போலீசார் கைது செய்ய சென்றபோது கதவைத் திறக்காமல் கஸ்தூரி அடம் பிடித்ததோடு மகனை நினைத்து கண்கலங்கியதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பங்களாவில் உள்ள வீட்டு அறையில் கஸ்தூரி தங்கி இருந்த நிலையில் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
போலீசார் கதவை தட்டியும் திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து வெளியே வந்த கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஹைதராபாத்தில் இருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த போது நான் இல்லாமல் தனது மகன் இருக்க மாட்டான் என கண் கலங்கியதாகவும், இரவு உணவு எதுவும் சாப்பிடாமல் வெறும் சாண்ட்விச், ஜூஸ் மட்டுமே வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னையிலும் அவர் சாப்பிடவில்லை என கூறுகின்றனர் போலீசார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications