நடிகர் விஜய் ஏன் இதுவரை பேசவில்லை.. ஆரம்பித்த பாஜக.. நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்
சென்னை: தவெக தலைவரான நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை என்றும் கடந்த வருடம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது ஆனால் எந்த போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றும், ஜனநாயகம் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பேசினார்களே தவிர இதுவரை நடிகர் விஜய் அது குறித்து ஏன் பேசவில்லை என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது. இதில் விஜய் பேசுகையில், "நமது அரசியல் பயணத்தின் மிக மிக மிக முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம். அழுத்தம் இருக்கிறதாக நினைக்கிறீர்களா? அழுத்தமா நமக்கா? நமக்கு கொடுக்கும் அழுத்தத்துக்கு அடங்கி போகிற ஆளா? இந்த முகத்தை பார்த்தா அப்படியா தெரிகிறது. நம்மகிட்ட அதெல்லாம் நடக்காது.

ஆனால் மக்களுக்கு அழுத்தம் இருக்கிறது. இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களும் பா.ஜனதாவுக்கு அடிமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களை நம்பியும் பிரயோஜனம் இல்லை. அ.தி. மு.க.வாவது நேரடியாக சரண்டர் ஆகிவிடுவார்கள். ஆனால், தி.மு.க. ஒருபடி மேலே போய் மறைமுகமாக சரண்டர் ஆகியிருக்கிறார்கள். தி.மு.க. வேடம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக கலர், கலராக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
குறைத்து மதிப்பீடு
நமக்காக உண்மையாக உழைக்க யாராவது வரமாட்டார்களா என மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் நேரம் இது. மாத்தி, மாத்தி ஓட்டு போட்டு ஏமாந்த அவர்கள் இப்போது நம்மை நம்புகிறார்கள். தேர்தல் கூட்டணி பற்றி ஜோசியம், ஏசியம் நடந்துகொண்டிருக்கிறது. விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அவரோடு யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள் என்று குறைத்து மதிப்பிடுகிறார்கள். அது நமக்கு புதிதல்ல. 30 வருடமாக நம்மை குறைத்துதான் மதிப்பிடுகிறார்கள். ஆனால், மக்கள் நம்மை சரியாக மதிப்பிட்டு ரொம்ப அக்கறையா, ரொம்ப தெளிவா தீர்க்கமாக நமக்கான ஒரு இடத்தை கொடுததிருக்கிறார்கள்.
விஜய் அதிரடி பேச்சு
இதற்கு முன்பிருந்தவர்கள் போன்றோ, இப்போது இருப்பவர்கள் போன்றோ ஊழல் செய்ய மாட்டேன். ஒரு பைசா தொட மாட்டேன். அது எனக்கு அவசியமும் இல்லை. எனக்கு அதை தொட வேண்டிய அவசியமே இல்லை. ஒரு துளி ஊழல் கரை கூட படியாது. படியவும் விட மாட்டேன். இதென்ன சினிமாவா, முதல்வன் படம் மாதிரி ஒரு நாளில் 'கிளீன்' செய்துவிடுவாரா என்று கேட்கலாம். இது சாத்தியம் இல்லைதான். ஆனால் அது படிப்படியாக நடக்கும். தேர்தல் முடிவுக்கு பின்னர் தீயசக்தியிடம் இருந்தும், ஊழல்வாத அடிமை சக்தியிடம் இருந்தும் தமிழகத்தை மீட்டுவிட்டோம் என்று உறுதியாக அறிவிப்போம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உங்களோடு நான் இருக்கிறேன். தன்னம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்." என்று கூறினார்.
பாஜக மீது விமர்சனம்
இந்த பேச்சின் மூலம் நடிகர் விஜய் முதல் முறையாக பாஜகவை பெயரை சொல்லி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல் திமுகவை மட்டும் விமர்சித்து வந்த விஜய், அதிமுகவையும் இந்த முறை மிக மோசமாக விமர்சித்துள்ளார். அடிமை என்று விமர்சித்திருப்பதற்கு அதிமுக எதிர்வினையாற்றி வருகிறது. பாஜகவும் தற்போது விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகிறது.
விஜய் ஏன் பேசவில்லை
பாஜக நிர்வாகியான நடிகை கஸ்தூரி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தவெக தலைவரான நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை. கடந்த வருடம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது ஆனால் எந்த போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. ஜனநாயகம் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பேசினார்களே தவிர இதுவரை நடிகர் விஜய் அது குறித்து ஏன் பேசவில்லை.
கஸ்தூரி தாக்கு
ஊழல் நடந்தால் தட்டி கேட்பேன் எனக் கூறும் விஜய், ஜனநாயகம் திரைப்படத்தின் விவகாரத்தை பேசாதது ஏன்? என மக்கள் என்னை கேட்க சொன்னதாக கேட்கிறேன். என்.டி. ஏ கூட்டணி ஓடாத டப்பா என்ஜின் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் விரைவில் திமுக டப்பா டான்ஸ் ஆட போகிறது.
இந்தி படிப்பு
இந்தியை படிக்கக் கூடாது என கூறுபவர்கள் அவர்கள் பள்ளியில் மட்டும் இந்தியை தேர்வாக எழுதுகின்றனர், அவர்கள் பள்ளியில் தவறை யாரும் மாணவர்கள் இலவசமாக இந்தி படிக்கக் கூடாது என திமுக எண்ணுகிறது. திமுக ஹிந்தியை காசு கொடுத்து படிக்க வேண்டுமே தவிர இலவசமாக படிக்கக் கூடாது என எண்ணுகிறது. அடுத்த முறை தேர்தலில் செங்கல்லை கொண்டு வந்தது போல் இந்த முறை கோழி முட்டையும், மணலையும் எடுத்துக் கொண்டு வந்தாலும் வருவார்கள் இதனால் அது அவர்களுக்கு தேர்தல் முடிவை காட்டும்" இவ்வாறு கஸ்தூரி கூறினார்.
-
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
லீக்கான ‘ஜனநாயகன்'.. வலைதளங்களில் பரவும் 5 நிமிட காட்சிகள்.. விஜய் – படக்குழுவுக்கு அதிர்ச்சி -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
Jana nayagan: லீக் ஆன ஜனநாயகன் படம்.. இயக்குநர் ஹெச் வினோத்தின் உருக்கமான பதிவு! வெளியான அதிர்ச்சி தகவல் -
கதிகலங்கி போவார்கள்.. இதை கொஞ்சம் யோசிங்க! ஜனநாயகன் படம் லீக் ஆனது பற்றி இயக்குநர் மோகன் ஜி ஆதங்கம் -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
விஜய்யை விட பல மடங்கு அதிகம்.. சீமான் அஃபிடவிட்டை டவுன்லோடு செய்தவர்கள் இவ்வளவு பேரா? -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
TN 2026 Review: இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டாரா? தநா 2026ல் கதை இதுதான்! இந்திரஜா நெகிழ்ச்சி -
திருச்சி கிழக்கு தொகுதியில் ‘டபுள்’ விஜய்.. மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டி! முழு லிஸ்ட் இதோ!












Click it and Unblock the Notifications