நடிகை கஸ்தூரியின் "புண்ணாக்கு".. செங்கோலுன்னு சொன்னாலே, ஓங்கோலுக்கு எரியுதே ஏன்? பாய்ந்து வந்த பாஜக
சென்னை: செங்கோல் குறித்த பிரச்சனைகள் நாடு முழுவதும் எதிரொலித்து வரும்நிலையில், நிதியமைச்சர் சீதாராமனும் இதற்கு விளக்கம் தந்திருந்தார்.. இந்நிலையில், நடிகை கஸ்தூரி கேட்ட கேள்வியால், ஒட்டுமொத்த பாஜகவினரும் டென்ஷன் ஆகி உள்ளனர்.. என்ன காரணம்?
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாக, அதனைக் கண்டிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது.
நாளை திறப்பு விழா: நாளைய தினம் அதாவது 28-ம் தேதியன்று புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட உள்ளன.. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்துவைக்கிறார்..

இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமே முன்னிறுத்தப்படுவதாகவும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன... நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் தான், பாராளுமன்றத்தின் கட்டிடத்தைத் திறக்க வேண்டும்.. அவரை தவிர்த்துவிட்டு, பிரதமர் மோடி எப்படி திறக்கலாம் என்ற கேள்விகள் எழுகின்றன..
புதிய நாடாளுமன்றம்: இப்படித்தான், புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டியபோதும் அப்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டதாகவும், இப்போதைய திறப்பு விழாவுக்கும், இப்போதைய குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.. இதன் மூலம் நாட்டின் குடியரசுத் தலைவர்கள் என்றபோதும், அவர்களின் பட்டியலினம் மற்றும் பழங்குடியினம் காரணமாக புறக்கணிக்கப்படுவதாகவும் அந்த குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.
அதுமட்டுமல்ல, நாளைய தினம், சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலையும் வைக்கவுள்ளார்கள்.. நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழர் கால மாதிரி செங்கோல் நிறுவப்படும் என்று மத்தியஉள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இது நாடு சுதந்திரம் அடைந்தபோது, தமிழர்களைசேர்ந்த ஆதீனத்தால் வழங்கப்பட்டது. இதைத்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.
மன்னர் பதவி: கடந்த 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில், முதல் பிரதமர், ஜவஹர்லால் நேருவிடம் சோழர்கால மாதிரி செங்கோல் வழங்கப்பட்டது... தமிழ் பாரம்பரிய முறைப்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர் பதவி ஏற்கும்போது அவரிடம் செங்கோலை ஆன்மிகத் தலைவர் ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது.

இதன் அடிப்படையிலேயே சோழர் கால மாதிரி செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டது. இது இப்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு கேலரியில் வைக்கப்பட்டுள்ளது.. அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த செங்கோலைதான், டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டதாக தகவலும் வெளியானது.. இதையடுத்து, செங்கோல் விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது.. விமர்சனங்களும், எதிர்கருத்துக்களும் எழுந்தபடியே உள்ளன.
நிர்மலா விளக்கம்: இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து ஒரு நீண்ட விளக்கம் தந்திருந்தார்.. "நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதால் தமிழுக்கும், தமிழருக்கு பெருமை.. அடுத்த 100 ஆண்டுக்கு, நாட்டின் சின்னமாக இந்த செங்கோல் இருக்க போகிறது. செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. பிரதமர் மோடிக்காக இல்லாவிட்டாலும், மக்களுக்காகவாவது நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்'' என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
இப்படி இந்த செங்கோல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும், இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக ட்வீட் ஒன்றினை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்..

அதில், "செங்கோலுன்னு சொன்னாலே ஓங்கோலுக்கு எரியுதே ஏன் ? உயிர் போகும் பிரச்சினையை விட்டுபுட்டு இந்த புண்ணாக்கை விவாதிச்சுட்டு இருக்கோம். ஒரு வேளை அதான் task ஓ? என்னை கேட்டா செங்கோலோ பேனாவோ, எல்லாமே அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தம்பட்டம். மக்களுக்கு இதெல்லாமே தேவையில்லாத ஆணிதான். செங்கோல் உலகம் முழுக்க உண்டு. ஆங்கிலேயர், ஆப்பிரிக்கர், ஆரியர், எல்லா மன்னரும் பயன்படுத்தினார்கள். தமிழரின் பிரத்தியேக அடையாளம் இல்லை. அப்புறம் ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் எதற்கு'' என்று பதிவிட்டுள்ளார்..
நடிகை கஸ்தூரி: கஸ்தூரியை பொறுத்தவரை, திமுக, அதிமுக, விசிக என எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தவறு என்று தெரிந்தால், அதை துணிச்சலுடன் சுட்டிக்காட்டி விமர்சிப்பவர் கஸ்தூரி.. யாருக்காகவும், எதற்காகவும் பயந்தவர் கிடையாது.. டாஸ்மாக் முதல் சட்டம்ஒழுங்கு சீர்கேடுவரை திமுக அரசின் பல்வேறு விவகாரம் கேள்விகளை எழுப்பியவர்..
இதனால், பாஜக ஆதரவாளராகவே கருதப்படுவதால், திராவிட கட்சியினரின் எதிர்மறையான விமர்சனங்களையும் பலமுறை சந்தித்துள்ளார்.. அதேசமயம், தன்மீது வீசப்படும், கேவலமான விமர்சனங்களை கண்டு பின்வாங்காமல், தைரியமாக அந்த விமர்சனங்களை எதிர்கொண்டு பதிலளித்தும் வருபவர்.. இப்போது, பாஜகவுக்கு எதிரான கருத்தை கஸ்தூரி பதிவு செய்யவும், ஆத்திரமடைந்த பாஜவினர், நடிகை கஸ்தூரியின் பதிவிற்கு திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கின்றனர்..
நறுக் கேள்வி: போகிற போக்கில் "பேனா"சின்னத்தை இடித்துரைத்து சென்றாலும், "ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் செங்கோல் எதற்கு?" என்று கஸ்தூரி எழுப்பிவிட்டு சென்றுள்ள இந்த கேள்வி, அரசியல் களத்தின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!!
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications