"வாய்க்கொழுப்பு".. கஸ்தூரிக்கு "கெடு" வைத்த வீரலட்சுமி.. இட ஒதுக்கீடு பெறுபவர் கொலைக்கார பசங்களா?
சென்னை: நடிகை கஸ்தூரி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டு, வீரலட்சுமி 3 நாள் கெடு வைத்திருக்கிறார்.. என்ன நடந்தது?
பிரபல நடிகை கஸ்தூரி, துணிச்சல் மிக்க பெண்மணி.. சமூக செயற்பாட்டாளர்.. திமுக, அதிமுக, விசிக, பாஜக, என எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தவறு என்று தெரிந்தால், அதை தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்..

யாருக்காகவும் பயப்படாமல், மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக சொல்பவர்.. பெரும்பாலும், திமுகவை இடித்துரைத்தே கருத்து சொல்வதால், இதற்கான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருபவர்..
துணிச்சல்: அதேசமயம், பாஜகவின் ஆதரவாளர் என்ற முத்திரையை பெற்றவர்.. எனினும், இதுவரை பாஜகவில் இவர் இணைந்தது இல்லை.. அதிமுகவிலும் இவர் உறுப்பினர் கிடையாது.. நேற்றுகூட கஸ்தூரி கூறிய கருத்து ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது..
கஸ்தூரி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், இடஒதுக்கீடு பெறுபவர்கள், கொலைக்காரர்கள் என்று சொன்னதாக தெரிகிறது.. இதையடுத்து, கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன..
கண்டனம்: பலரும் திரண்டு வந்து சோஷியல் மீடியாவில் கஸ்தூரிக்கு பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.. அந்த வகையில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும், தன்னுடைய கண்டனத்தை, வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ளார். அதில், கஸ்தூரியை சரமாரியாக விமர்சித்து கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.
குறிப்பாக, "இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைக்கார பசங்களா ? முதல்ல இடஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரியுமா? அந்த இடஒதுக்கீடு பெறும் கொலைக்கார பசங்க டிக்கெட் வாங்கும் பணத்தில்தானே சாப்பாடு சாப்பிடுகிறாய்? டிரஸ், மேக்கப்பொருட்களை வாங்குகிறாய்? இந்த தமிழ்மண்ணில் சமூகநீதிக்காகவும், இடஒதுக்கீட்டை பெறுவதற்காகவும், போராட்டம் செய்தவர்களின் வரலாறு தெரியுமா?
கோட்டா: என் குடும்பத்தில், இந்த கோட்டாவை பெறுவதற்காக 21 பேர் குண்டடி பட்டு வீரமரணம் அடைந்த வரலாறு தெரியுமா? இப்படித்தான் அன்று திருநங்கைகளை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்தாய்..
நடிகை கஸ்தூரி, 3 நாட்களுக்குள் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கணும், இல்லாவிட்டால், தமிழர் முன்னேற்றபடையினர் கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிடுவார்கள், தக்க பாடத்தையும் கஸ்தூரிக்கு புகட்டுவார்கள்" என்று வீரலட்சுமி ஆவேசமாக கூறியிருக்கிறார்.
கெடு: வாய்க்கொழுப்பு கஸ்தூரிக்கு அதிகமாகிவிட்டது என்று பேச ஆரம்பித்து, நடுநடுவே மரியாதை குறைவான வார்த்தைகளில் இந்த வீடியோவில் சாடியிருக்கிறார் வீரலட்சுமி.. ஏற்கனவே, பெண்ணியம் குறித்தெல்லாம் பலமுறை கடுமையாக கஸ்தூரியை விமர்சித்து, வீடியோககளை பதிவிட்டு வந்த வீரலட்சுமி, மீண்டும் தற்போது இடஒதுக்கீடு குறித்து வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications