என் வீட்டிலும் வெள்ளம்.. அதென்ன சிஐடி காலனியில் ஒரு சொட்டு கூட இல்லை? கஸ்தூரிக்கு வந்த திடீர் சந்தேகம்
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நீச்சல் குளம் போல் தேங்கியுள்ளதாக நடிகை கஸ்தூரி புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் தமிழகத்திற்கு முதல் புயலாக மிக்ஜாம் வந்தது. மிக்ஜாம் என்றால் வலிமை என்ற அர்த்தமாம். அதற்கேற்ப சென்னையையே புரட்டி போட்டுவிட்டது.

சென்னையில் 2,3,4 ஆகிய தேதிகளில் 400 மி.மீ. மழை பெய்திருக்கும் என்கிறார்கள். பெருங்குடியில் ஒரே நாளில் 50 செ.மீ. க்கு மேல் மழை பெய்ததாகவும் கூறுகிறார்கள். இதனால் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருக்கிறது.
கழுத்தளவு நீர், இடுப்பளவு நீர், 15 அடி நீர் என ஆபத்தான வகையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவர்களாகவே வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் எழுந்துள்ளது. படகு போக்குவரத்துக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் போன் செய்தாலும் படகு போக்குவரத்துக்கு யாரும் வருவதில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபலங்கள் தங்கியிருக்கும் இடங்களும் இந்த மழைக்கு தப்பவில்லை. நடிகர் விஷ்ணு விஷால், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஆகியோர் தங்கியிருந்த காரப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அவர்கள் இருவரும் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அது போல் ரஜினிகாந்தின் வீடு இருக்கும் போயஸ் தோட்டத்தில் அவர் வீட்டு வாசல் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது போயஸ் தோட்ட வீட்டிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாக புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மொத்தம் 3 புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதில் முதல் இரு புகைப்படங்கள் நேற்று முன் தினமும் நேற்றும் எடுக்கப்பட்டது.

Poes garden.
— Kasturi (@KasthuriShankar) December 5, 2023
Pic1: yesterday
Pic2 : now.
Pic3 : My home with indoor pool 😭
1 km away, CIT colony. *NO* water . Any guesses why?
வடிஞ்சிச்சி விடிஞ்சிச்சின்னு வந்தீங்க, ... பிஞ்சிச்சி. அம்புடுதேன்.
PR exercise of this govt stinks more than the stagnant water. #ChennaiFloods pic.twitter.com/TCO8Lny3OI
இதைத் தொடர்ந்து 3 ஆவது புகைப்படம் அவருடைய வீடு, நீச்சல் குளம் போல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் போயஸ் கார்டனில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள சிஐடி காலனியில் வெள்ளம் வராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு திமுக எம்பி கனிமொழி வசித்து வருகிறார். அதனால் அவர் அப்படி கேட்டதாகவே பார்க்கப்படுகிறது.

கஸ்தூரியின் போயஸ் கார்டனில் மழை வெள்ளம் பாதிப்பு என்பதை அறிந்த நெட்டிசன்கள் அவரை பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தினர். அதற்கு அவர் அந்த வீட்டில் யாரும் இல்லை, அது பூட்டப்பட்ட பராமரிக்கப்படாத வீடு என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications