துப்புவானாமில்லை.. துப்பு கெட்ட பயலே.. அசிங்கமாக கமெண்ட் போட்டவரை உலுக்கி எடுத்த கஸ்தூரி!
சென்னை: "பேரணியில் கமல் ஏன் கலந்துக்கல.." என்று கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி, "உன் தலைவனுக்கு என்ன தெரியுமோ தெரியலையோ.. துப்புவானாமில்லே... துப்புக்கெட்ட பயலே" என்று மக்கள் நீதி மய்ய உறுப்பினர் ஒருவரையும் போட்டு தாக்கி ட்வீட் போட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டன. அப்போது இந்த பேரணியை மிக பிரம்மாண்டமாக்க 98 அமைப்புகளுக்கு திமுக அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தது.
இந்த சமயத்தில்தான், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யமும் கலந்துகொள்ளும் என்று கமல்ஹாசன் அறிவித்திருந்தார். பெருந்தன்மையோடு கமல் இப்படி சொன்னது திமுகவுக்கு மகிழ்ச்சியையே தந்தது.. அதனால் கமலின் முடிவை வரவேற்கும் வகையில் ஆர்எஸ் பாரதியிடம் முறைப்படி அழைப்பிதழை கொடுத்து அனுப்பினார் ஸ்டாலின்.

அழைப்பு
ஆர்எஸ் பாரதியும், சென்னை ஆழ்வார்பேட்டை மநீம ஆபீசில் கமலை சந்தித்து, "ஸ்டாலினின் பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன், நீங்கள் கண்டிப்பாக பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்க.. நிச்சயம் மய்யம், இந்த விவகாரத்தில் திமுகவுக்கு துணை நிற்கும் என்று கமல் சொன்னார். ஆனால் இந்த பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளவில்லை. இதை சுட்டிக்காட்டி நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டு, கமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
|
கேள்வி
"I missed the memo. Why did not Mr Kamal Haasan back out of today's peaceful protest ?
கமல் கலந்து கொள்ளாததற்கு காரணம்?" என்று முதல் ட்வீட்டில் கேள்வி எழுப்பியிருந்தார்.
கமல் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கஸ்தூரி எழுப்பிய ட்வீட்டிற்கு பலரும் தங்கள் பாணியில் பதிலளித்து வருகின்றனர்.
|
கமெண்ட்கள்
"போயிருந்தா மட்டும் என்ன நடந்திருக்க போகுது பத்தோட ஒன்னு பதினொன்னா நானும் ரவுடி தான்னு வண்டில ஏற வேண்டியது தான். போனவங்களாலும் ஒன்னும் நடக்காது." , "திமுக வின் B டீம் என்ற முத்திரை குத்திவிடுவார்கள் என்பதால் இருக்கும்" என்று கமெண்ட்கள் வந்து குவிகின்றன. இந்த கமெண்ட்டில் ஒருவர், "என் தலைவருக்கு தெரியும் எது சரி தவறு என்று நீ மூடு.. கஸ்தூரினு பேரு காரி துப்புறமாதிரி பண்ணிடாத.." என்று ஒருவர் கமெண்ட் போட்டிருந்தார்.
|
பதிலடி
இந்த கமெண்ட்டிற்கும் கஸ்தூரி பதிலளித்தபோது, "உன் தலைவனுக்கு என்ன தெரியுமோ தெரியலையோ, உனக்கு மரியாதை தெரியலை. நியூஸும் தெரியலை. உங்க தலைவரு தான் கலந்துப்பேன்னு ரெண்டு நாலு முன்னாடி அறிக்கை விட்டாரு , இப்ப ஏன் மனசு மாறிட்டாருன்னு கேள்வி வரத்தான் செய்யும். உனக்கு பதிலும் தெரியலை. துப்புவானாமில்லே... துப்புக்கெட்ட பயலே." என்று திருப்பி போட்டு தாக்கி உள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications