நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி.. பட்டியலின மக்கள் குறித்த அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டெல்லியில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று மீரா மிதுன் ஆஜராக இருந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

பட்டியலில் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக அவர் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவரை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை எனவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.
வழக்கு பின்னணி
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனையும் அவரின் நண்பர் சாம் அபிஷேகையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் தவிர்த்து வந்தார். இதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரைப் பிடிக்க காவல்துறை திணறி வந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மீரா மிதுனை மீட்டு தர கோரி அவரது தாயார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் வீராமிர்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications