நல்லவரு கிடைத்தால் நாளைக்கே திருமணம்! ஆனால்..! நித்யா மேனன்! 80ஸ் கிட்ஸ் நோட் பண்ணுங்கப்பா!
சென்னை: திருமணம் நடந்தால் மகிழ்ச்சி என்றும் இல்லையென்றால் அதைவிட மகிழ்ச்சி என்றும் நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். மேலும் தனது காதல் அனுபவங்கள் வலியுடையதாகவே இருக்கும் என்றும் வாழ்க்கையில் ஒரு ஆத்ம துணையை தேடிய போது அப்படியொரு துணை கிடைக்கவில்லை என்றும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நித்யாமேனன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் அதிகமாக தனியாகத் தான் இருப்பேன். எத்தனை முறை காதலில் விழுந்தேனோ அத்தனை முறையும் எனது இதயம் உடைந்து போனது. எனது துணையுடன் அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தன.
ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவே இல்லை. நல்ல துணை கிடைத்தால் நாளையே திருமணம் செய்து கொள்வேன் என நித்யா மேனன் தெரிவித்துள்ளார். ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நித்யா மேனன். இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
நித்யா மேனன், விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நித்யா மேனன் மும்முரமாக கலந்து கொண்டிருந்தார். இவர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகை சுஹாசினியிடம் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: "என்னுடைய உடலமைப்பை தலைமுடியை எல்லாம் மாற்றிக் கொண்டுதான் நடிக்க வேண்டும் என யாராவது கேட்டால் அப்படி ஒரு படமே எனக்கு வேண்டாம் என சொல்லிவிடுவேன்.
என்னால் எதையும் மாற்றிக் கொள்ள முடியாது. உங்களுக்கு ஓகே என்றால், நான் நடிக்க வருகிறேன் என்றுதான் சொல்வேன். நான் முதலில் தெலுங்கு படத்தில் நடிக்க வந்த போது மற்ற நடிகைகள் எல்லாம் உயரமாக, அழகாக இருப்பார்கள். ஆனால் நான் குள்ளமாக இருப்பேன்.
அந்த படத்தில் நான் நடித்ததை தொடர்ந்து எல்லோரும் சுருட்டை முடியை நம்பிக்கையுடன் வைத்துக் கொள்ள விரும்பினர். இன்றைக்கும் எல்லோரும் இதை விரும்புகிறார்கள். என்னிடம் ஒருவர் கதை சொல்ல வருகிறார், அதை பிடிக்காமல் நான் மறுக்கிறேன் என்றால் உடனே அவருக்கு ஈகோ வந்துவிடும்.
உடனே என்னை குள்ளமாக இருக்கிறாள், இந்த கதைக்கெல்லாம் செட் ஆக மாட்டாள் என என்னை குறை சொல்வார்கள். இதெல்லாம் நடந்திருக்கிறது" என தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அது போல் மற்றொரு யூடியூப் சேனலுக்கு நித்யா அளித்த பேட்டியில், நான் குழந்தையாக இருக்கும் போது எனது அம்மா, என்னை பாட்டியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார்.
நான் பாட்டியைத்தான் அம்மாவாக பார்த்தேன். பள்ளிகளிலும் நட்பு வட்டாரங்களில் இருந்தும் நான் தனியாகத்தான் இருந்தேன். எனது காதல் அனுபவங்கள் வலிமையுடையதாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு ஆத்ம துணையை தேடினேன். ஆனால் அப்படியொரு துணை கிடைக்கவில்லை.
இது போன்ற உணர்வுகளில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன். தனியாக பயணம் செய்வதுதான் உண்மையான சுதந்திரத்தை தருகிறது. ஒரு வேளை அப்படிப்பட்ட ஆத்ம துணையை கண்டுபிடித்தால் நாளையே கூட திருமணம் செய்து கொள்வேன். திருமணம் நடந்தால் மகிழ்ச்சி! இல்லையென்றால் அதை விட மகிழ்ச்சி! ரத்தன் டாடாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை" என தெரிவித்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications