Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றத்தை காப்பாத்தியாச்சு.. நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு! குழம்பிய நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களாகவே திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொடர்பான உத்தரவின் மூலம் நமது பாரம்பரியத்தை காத்த நீதித்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாக, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Actress Niveda Pethuraj Tirupparankundram Hill

திருப்பரங்குன்றம் மலை

மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

சிக்கந்தர் தர்கா

இதனிடையே சிக்கந்தர் தர்கா பகுதியில் பாராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி சிக்கந்தர் தர்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலர் ஒசிர்கான் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். சிக்கந்தர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தக்கோரி அப்துல் ஜப்பார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு

ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மீதான விசாரணை மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி விஜயகுமார், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தி, மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

நிவேதா பெத்துராஜ் கருத்து

இந்த நிலையில் தான் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,' திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நமது பாரம்பரியத்தை பாதுகாத்த நீதித்துறைக்கு மிக்க நன்றி. அமைதி, பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை பாதுகாப்பது போன்ற சில உண்மைகள் அங்கீகரிக்கப்படுவதற்கு ஒருபோதும் சண்டை தேவையில்லை" என கூறி இருக்கிறார். கடந்த சில தினங்களாகவே நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழக அரசியல் நிலை சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உண்மையிலேயே அவர் தான் பதிவிட்டாரா என குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+