காந்தி இல்லை.. நேதாஜி வழியை பின்பற்றும் நபர்நான்.. அப்பத்தான் பயம் இருக்கும்.. நடிகை ரஞ்சனா பேட்டி
சென்னை: நான் காந்தியின் வழியை பின்பற்றும் நபர் கிடையாது, நான் நேதாஜி வழியைத்தான் பின்பற்றுவேன் என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.
குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும் மேலே ஏறியபடியும் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாகவும் கண்டக்டரை அவதூறாக பேசியதாகவும் நடிகை ரஞ்சனா நாச்சியார் நேற்று மாங்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் 40 நாட்களுக்கு காலை, மாலை என இரு வேளையும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த ரஞ்சனா நாச்சியார், மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கி செல்வதை பார்த்தேன்.
பொதுவாக மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் வீடியோவை பார்த்தாலே நமக்கு கோபம் வரும், நெஞ்சம் பதைபதைக்கும். ஆனால் நேரில் பார்க்கும் போது எனக்கு எப்படியிருக்கும்? ஆனால் மாணவர்கள் இப்படி போகும் போது யாரும் தட்டி கேட்பதில்லை, அவ்வாறு இல்லாமல் இதை அனைவரும் தட்டி கேட்க வேண்டும்.
என்னை பொருத்தமட்டில் நான் காந்தியின் வழியை பின்பற்றும் நபர் கிடையாது, எங்கள் குடும்பத்தினர் அனைவருமே நேதாஜியின் வழியை பின்பற்றுபவர்கள். மாணவர்களை அடித்தது சரி என்று நான் சொல்லவில்லை, அதே நேரத்தில் அனைவரையும் அடிக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்புடன் இருந்தால்தான் தவறு செய்ய மாட்டார்கள், பயப்படுவார்கள். இவ்வாறு நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?: பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் நேற்று முன் தினம் குன்றத்தூர் வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டை தாண்டியும் தொங்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பேருந்தை வழிமறித்த நடிகை ரஞ்சனா, டிரைவரிடம் சரிமாரி கேள்விகளை எழுப்பினார். பேருந்தில் இப்படி பயணிப்பவர்களை நீங்கள் செருப்பால் அடித்திருக்கலாமே! அங்க பாருங்க ஒருத்தன் மேல் ஏறுகிறான் என்றார்.
உடனே பேருந்தின் பின்வாசலுக்கு சென்ற ரஞ்சனா, அங்கு படியில் இருந்த மாணவர்களை இறங்குடா, இறங்குடா நாயே என அழைத்து வெளியே தள்ளினார். வர மறுத்த மாணவர்களை தலையிலும் கன்னத்திலும் ஓங்கி அடித்து கீழே இறக்கினார். பின்னர் நடத்துநரை பார்த்து ஒருமையில் உனக்கு அறிவு இல்லையா, இப்படி படியில் தொங்குவதை பார்த்துக்கிட்டு இருக்கே, அறிவு கெட்ட நாயே என திட்டினார்.
இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர் சரவணன் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீஸார், கெரும்பாக்கத்தில் உள்ள நடிகை ரஞ்சனா வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீஸார் கைது செய்வதாக தெரிவித்தனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரஞ்சனா கூறுகையில் என் படுக்கை அறையில் நான் உடைமாற்றி கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு ஆண் போலீஸ் வந்து என் அறையின் ஜன்னல் கதவை தட்டினார். ஏன் நாங்கள் கதவை திறக்கும் வரை காத்திருக்க மாட்டீர்களா என கேட்டார். இதையடுத்து போலீஸாரிடம் வாரண்ட் இருக்கிறதா என்றார், அதற்கு எஃப்ஐஆர் காப்பி பதிவாகிவிட்டது என்றனர். உடனே எஃப்ஐஆர் காப்பியை காட்டுங்கள் என்றதுக்கு , நீங்கள் முதல்ல வாங்க என போலீஸார் அழைத்தனர்.
பிறகு என் காரிலேயே வருகிறேன் என்றார், அதற்கு மறுத்தனர். வேண்டுமானால் என் காரில் போலீஸாரும் வரட்டும் என ரஞ்சனா கூறினார். போலீஸார் உங்களுடன் வருவார்கள் மேடம், ஆனால் நீங்கள் எங்கள் வண்டியில்தான் வர வேண்டும், நாங்கள் உங்களை கைது செய்வதால் வேறு வாகனத்தில் வருவதற்கு அனுமதி இல்லை என்றனர். மேலும் ரஞ்சனா, என்னை குற்றவாளி போல் நடத்தி அராஜகம் செய்கிறீர்களே. என் வண்டியில் வந்தால் என்ன , நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன், வழக்கை சந்திக்கிறேன் என்றார். இதையடுத்து அவரை பெண் போலீஸார் இழுத்து சென்று வண்டியில் ஏற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications