இவங்க வருவாங்கன்னு எதிர்பார்க்கலை.. செங்கொடியோடு பம்பரமாக சுற்றும் ரோகிணி.. ப்பா செம வரவேற்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் சிபிஎம் கட்சியை ஆதரித்து நடிகை ரோகிணி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை பிரச்சாரம் செய்ய களமிறக்கி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவும் நமீதா தொடங்கி பல நடிகர், நடிகைகளை பிரச்சார களத்தில் இறக்கி உள்ளது.
மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கட்சிகள் நட்சத்திரங்களை களத்திற்கு கொண்டு வந்து உள்ளன. இப்படி இருக்க ஒரு நடிகை மட்டும் சத்தமே இன்றி.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திமுக கூட்டணிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.... அவர் நடிகை ரோகிணி!

திமுக
திமுக கூட்டணியில் சிபிஎம் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் வந்து பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தற்போது நடிகை ரோகிணியும் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரச்சாரம்
சிபிஎம் போட்டியிடும் திருப்பரங்குன்றம், அரூர், கந்தவர்வகோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, கீழ்வேளூர் ஆகிய 6 தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ரோகிணி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உட்பட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரோடு சேர்ந்து ரோகிணி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
கந்தர்வகோட்டை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மா.சின்னதுரை அவர்களுக்கு வாக்கு கேட்டு திரைக் கலைஞர் நடிகை ரோகினி அவர்கள் வாக்கு சேகரித்தார்#கந்தர்வகோட்டை#மாசின்னதுரை#மதசார்பற்ற_முற்போக்கு_கூட்டணி#நமதுசன்னம்#அரிவாள்_சுத்தியல்_நட்சத்திரம்#முதல்_சின்னம்#வாக்களிப்பீர் pic.twitter.com/1ixIxc96d3
— velu (@velu_ramavel) March 28, 2021
பலர் வருகிறார்கள்
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் நடிகைகள் பலர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தற்போது ரோகிணி சிபிஎம் கட்சிக்காக 6 தொகுதிகளிலும் பம்பரம் போல சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் களத்தில் இப்படி வேகம் காட்டுவதை கட்சி உறுப்பினர்கள் பலரும் கூட எதிர்பார்க்கவில்லையாம்.

வேகம்
இரவு பகல் பார்க்காமல் இவர் எந்நேரமும் தொகுதியிலேயே இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக வேனில் மட்டும் மிதந்தபடி சென்று இவர் பிரச்சாரம் செய்யவில்லை. வீடு, வீடாக சென்று, மக்களோடு மக்களாக நின்றாக அவர்களின் குறைகளை கேட்டறிந்து பிரச்சாரம் செய்கிறார்.
|
செம்ம
அதிலும் சில கிராமங்களில் இவர் செங்கொடி ஏந்தி பிரச்சாரம் செய்தது கவனம் ஈர்த்துள்ளது. மக்களோடு மக்களாக இவர் எளிமையாக பேசுவது பெரிய அளவில் அவர்களை கவர்ந்து இருக்கிறது. இவர் இயல்பாக.. எந்த அலட்டலும் இன்றி பேசுவதால் மக்களும் போகிற இடங்களில் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.
|
ஆக்டிவ்
இவர் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இன்றி சாதாரணமாக பிரச்சாரம் செய்து வருகிறார் . நான் நடிகை .. எனக்கு பெரிய வரவேற்பு வேண்டும் என்று இல்லாமல் இயல்பாக இவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீப நாட்களாக சினிமாவில் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருந்த ரோகிணி சில பொது சேவை பணிகள், சிபிஎம் கட்சி பணிகளை செய்து வந்தார்.

அட்டாக்
இந்த நிலையில் தற்போது தேர்தல் நேரத்தில் சிபிஎம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக, பாஜக மீது நேரடியாக அட்டாக் செய்து இவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார் . நன்றாக தமிழும் பேசுவதால்..மக்கள் மத்தியில் ரோகிணி வேகமாக கனெக்ட் ஆகி வருகிறார்.. வரும் காலங்களில் திமுக கூட்டணியின் முக்கியமான நட்சத்திர பேச்சாளராக உருவெடுக்க ரோகிணிக்கு அதிக வாய்ப்புள்ளது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications