"சேட்டை".. ரோகினியையும் விட்டு வைக்காத கிஷோர் கே. சாமி.. "ரகுவரனுமா?".. போலீஸில் பரபரப்பு புகார்
கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி போலீசில் புகார் தந்துள்ளார்
சென்னை: ஏற்கனவே 2 கேஸ்களில் கைதாகி இருக்கும் கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி போலீசில் பரபரப்பு புகார் தந்துள்ளார்..!

யார் இந்த கிஷோர் கே.சாமி?
ஒரு யூடியூப்பை சொந்தமாக வைத்து கொண்டு, தமிழ்நாட்டு தலைவர்களை சரமாரியாக விமர்சிப்பவர்.. அம்பேத்கர், பெரியார் முதல், ஸ்டாலின் வரை அனைத்து திராவிட அரசியல் தலைவர்கள் பற்றியும் வாய்க்கு வந்தபடி பேசுபவர்.. பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்க மாட்டார்.. பொதுவெளி என்றும் பாராமல், பத்திரிகையாளர்களை மிக கேவலமாக பேசுவார்.

வார்த்தை தாக்குதல்
தனிமனித தாக்குதல்கள், தடித்த வார்த்தைகள், அவதூறான கருத்துகள் போன்றவைகளை பயன்படுத்தி களமாக இந்த யூடியூப்பை இவர் பயன்படுத்தி வந்துள்ளார்.. திராவிட கட்சி தலைவர்கள் மீது சேற்றை வாரி பூசுவதை ஒரு வேலையாகவே இவர் எடுத்து செய்து வந்துள்ளார்.. பெண் பத்திரிகையாளரை தவறாகப் பேசியதாக கோர்ட் கேஸ் வரை போனது..

அவதூறு
ஆனால் அந்த கேஸில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.. வந்தவர் சும்மா இல்லை.. மறுபடியும் அதே பெண் பத்திரிகையாளர் குறித்து தவறாக பேச ஆரம்பித்தார்.. இப்படி 14 கேஸ்கள் இந்த சாமி மீது பதிவாகி இருக்கின்றன.. இதற்கெல்லாம் காரணம் கடந்த காலத்தில் இவர் மீது அதிமுக தரப்பு காட்டிய அனுசரனைதான்.. அதிலும் குறிப்பாக, கொங்கு மாவட்ட மாஜி அமைச்சர் ஒருவரும் இவருக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்..

சவால்
இப்போது போலீசார் நடவடிக்கை எடுக்க முயன்றால், "முடிந்தால் என்னை கைது செய்து பாருங்க" என்ற தோரணையில் சவால் விடும் அளவுக்கு வலுவாக இருப்பவர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரையும் அநாகரீகமாக பேசி வந்தவர்தான் இந்த கிஷோர் கே. சாமி... தலைவர்களை பற்றி பேசினால், மிக குறுகிய காலத்தில் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்ற மலிவான சிந்தனைதான் இதற்கெல்லாம் காரணம்..!

ஜெயில்
இதனால், எத்தனையோ பேர் கிஷோர் கே சாமி மீது புகார் தெரிவித்துள்ளனர்.. இப்போது, காஞ்சிபுரம் திமுகவின் ஐடி பிரிவினர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...அம்பேத்கர், அண்ணா முதல் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக இவர் பதிவிட்டுள்ளதால், இந்த புகார் தரப்பட்டுள்ளது.

மற்றொரு புகார்
கடந்த 10-ம்தேதி கிஷோரை தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. 3 கேஸ்களும் அவர்மீது போடப்பட்டுள்ளன.. இப்போதைக்கு செங்கல்பட்டு ஜெயிலில்தான் இருக்கிறார்.. இந்நிலையில் கிஷோர் கே சாமி மீது மேலும் ஒரு வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர்.. மறுபடியும் பெண் பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்ட வழக்கில், போலீசார் அவரை கைது செய்தனர்..

ஆன்லைன் புகார்
மொத்தம் 8 பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட 12 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்... இதையடுத்து அடுத்த 14 நாட்களுக்கு ஜெயிலில்தான் கிஷோர் இருப்பார். இந்நிலையில் கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி இன்னொரு புகார் தந்துள்ளார்.. சென்னை கமிஷனர் ஆபீசுக்கு ஆன்லைன் மூலம் இந்த புகாரை ரோகினி அளித்துள்ளார்.

ரகுவரன்
தன்னைப் பற்றியும், மறைந்த கணவர் ரகுவரனை பற்றியும் சோஷியல் மீடியாவில் அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக ரோகினி புகார் சொல்லி உள்ளார்.. ஜெயிலில் இருக்கும்போதே 2 கேஸ் பதிவாகிவிட்டது.. இப்போது 3வது கேஸும் கிஷோர் மீது பதிவாகி உள்ளதால், "சாமி" இன்னும் பல நாட்களுக்கு உள்ளேதான் இருப்பார் போல தெரிகிறது..!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications