"சன்னிலியோன்".. அந்த படம் காட்டினாங்க.. அம்மான்னா உசுரு.. ஆளுநர் ரவியா? யார் அவர்? அடடே ஜி.பி.முத்து
ஜி பி முத்து, நடிகை நயன்தாரா, சன்னிலியோன் குறித்துபேசி, நம்மிடம் ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்
சென்னை: சன்னிலியோன் யாரென்றே தெரியாது என்று கூறிய ஜிபி முத்து, நயன்தாராவுக்கு குழந்தை பிறந்த விஷயமே தனக்கு தெரியாது என்று சொல்லி நமக்கு ஆச்சரியத்தை கூட்டி உள்ளார்.
ஜிபி முத்து.. இவரது யூடியூப் சேனலை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள். இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து சமீபத்தில் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்து இருந்தது.
எப்படியும் டாப் 5 போட்டியாளர்களில் ஜிபி முத்து நிச்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்..

Oh My Ghosh
பிக் பாஸுக்கு செல்வதற்கு முன்பாகவே ஜிபி முத்து 'Oh My Ghosh' என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்... இந்த படத்தில் ஜிபி முத்துவும் நடித்துள்ளதாக தெரிகிறது.. இது தொடர்பான விழாவில் பேசிய ஜிபி முத்து "எனக்கு இதான் முதல் படம்... சன்னி லியோன் யாருன்னு எனக்கு தெரியாது. தம்பி மணி தான் படம் காமிச்சான்" என்று சொன்னதுமே அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது. உடனே ஜிபி முத்து "ஐய்யயோ, தப்பா ஏதும் நினைக்காதீங்க, படம்னா சன்னி லியோன் போட்டோ தான் என்றார்..

சன்னிலியோன்
இதையடுத்து, சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு அவருடன் ஒரு டான்ஸும் ஆடினார் ஜிபி முத்து. இந்நிலையில் நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஜிபி முத்து, ஒரு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியின் சுருக்கம்தான் இது: "என்னையறியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டால், மறுநாள் காலையில் என்னை நானே திட்டிக் கொள்வேன்.. ஏலே, பேயுல போவான ஜிபிமுத்து, செத்த பயலலே நாற பயலே" என்று என்னை நானே திட்டிக்கொள்வேன்.. சினிமா ஆசை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இல்லை... டிக்டாக் எல்லாரும் செய்யவும், நானும் செய்ய ஆசைப்பட்டேன்..

PAPER ID
எத்தனையோ பேருக்கு நிறைய லைக்குகள் அப்போது விழும்.. எனக்கு ஒன்னு, 2 லைக்குதான் கிடைக்கும்.. முதல்முதலில் நான் டிக்டாக் வீடியோ போட்டபோது, எனக்கு ஒரு லைக்கூட விழல.. 10 நாள் கழித்து ஒரே ஒரு லைக் விழுந்தது.. அப்பறம் வெறுப்பாயிடுச்சு.. லைக் போட்டால் போடுங்க, போடாவிட்டால் எனக்கென்ன? என்று சலிப்பு வந்தது.. ஆனாலும் வீடியோ போட்டுக் கொண்டே இருந்தேன்.. அதுக்கப்பறம் பேப்பர் ஐடி என்று செத்த பயலுக வந்தானுங்க.. அவனுங்க என்னை கிண்டல் செய்து, கமெண்ட்களை போடுவாங்க.. அதெல்லாம் பார்த்து எனக்கு கோபம் வந்து, எங்க ஊர் பாணியில திட்டிட்டேன்..

பிளேடுகள்
செத்த பயலே, நாற பயலேன்னு சொல்றேனே, அதுகெட்ட வார்த்தை கிடையாது.. எங்க தூத்துக்குடி, திருநெல்வேலியில் வட்டார பேச்சு அது.. வீடியோவுக்காக யாரையும் திட்டியது இல்லை.. நிஜமாகவே கோபத்தில் அந்த பேப்பர் ஐடிக்களை திட்டினேன்.. என் உடம்பில் உள்ள தழும்புகளை பார்த்து, என்னை ரவுடின்னு நினைச்சிடறாங்க.. உண்மையை சொன்னால், நான் ஒரு கோழியைகூட வெட்ட மாட்டேன்... அதைபார்த்தாலே பயப்படுவேன்.. என் தம்பிக்கும், எனக்கும் பிரச்சனை வந்து, பிளேடை வைத்து, என்னை அவன் வெட்டிட்டான்.. அவன் கையில் பிளேடு வைத்திருந்தது யாருக்கும் தெரியாது.. இருட்டில் உடம்பெல்லாம் கிழிச்சிட்டான்.. ரத்தம் கொட்டியபிறகுதான் எனக்கு அது தெரிஞ்சது.. உடனே என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுபோய் தையல் போட்டாங்க..

பால்கோவா
என் மனைவியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. டிக்டாக் வீடியோ போடும்போதெல்லாம் எனக்கு எந்த தொந்தரவும், டார்ச்சரும் அவங்க எனக்கு தந்ததே இல்லை.. ஆனால், வீடியோ போடும்போது கேட்பாள், இது உங்களுக்கு தேவையான்னு கேட்டாள்.. எனக்கு பிடிச்சிருக்கு, நான் வீடியோ போடுவேன்னு சொன்னதுமே, எதுவுமே பேசாம போய்டுவாள்.. அன்னைக்கே என் மனைவி, சண்டை போட்டு, டிக்டாக் செய்யக்கூடாதுன்னு பிரச்சனை பண்ணியிருந்தால், இப்படி வந்திருக்க மாட்டேன்.. எத்தனையோ கஷ்டத்தில் இருந்தேன்.. பணக்கஷ்டம் நிறைய இருந்தது.. அவள்தான் வீட்டை சமாளித்தாள்.. டிக்டாக் வீடியோ போட்டு ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாலும், இட்லி, தோசை சுட்டு போடுவாள்..

சன்னி லியோன்
அதுக்காக சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டுவதை ஒப்பிட்டு பார்க்க கூடாது.. ஐயோ, அது எனக்காக ஊட்டல.. நண்பர்களின் ஆசைக்காக பால்கோவா ஊட்டிவிட்டேன்.. ஆனால், சன்னிலியோன் உடனே என் மேல பாசமா ஆயிட்டாங்க.. ஏதோ இங்கிலீஷில் அப்போ சொன்னாங்க.. எனக்குதான் புரியாம போயிடுச்சு.. சன்னிலியோன் யாரென்றே எனக்கு தெரியாது.. முன்னாடியெல்லாம் எனக்கு லெட்டரில், தலைவரே நீங்கள் ஒரு தமிழ்நாட்டு சன்னிலியோன்னு எழுதுவாங்க.. அப்பதான் அந்த பேரை கேள்விப்பட்டேன்.. அதுக்கப்பறம் சன்னிலியோன் கூடவே நடிக்க போறதா சொன்னாங்க.. நான் என் தம்பிகிட்ட யார் சன்னிலியோன்னு கேட்டேன்.. அவன் உடனே கூகுளில் அவங்க போட்டோவை காட்டினான்..

கேஷ் அமவுண்ட்டு
சன்னிலியோன் கூட நடிச்சால் என்ன? டிக்டாக்கை மறக்கவே மாட்டேன்.. டிக்டாக் மறுபடியும் இந்தியாவில் வந்தால், கண்டிப்பா டிக்டாக் செய்வேன்.. எப்பவுமே அதில் ஒரு ஆர்வம்.. யூடியூப்பில் இருந்து எனக்கு பணம் வருது.. அந்த கணக்கு வழக்கு எனக்கு தெரியாது.. என் தம்பிதான் பார்க்கிறான்.. எல்லா பணத்தையும் நானே சாப்பிட மாட்டேன்.. என் கூட இருக்கிறவங்களுக்கு நல்லா செலவு செய்வேன்.. நான் கஷ்டப்படும் காலத்தில் அனாதை ஆசிரமங்களுக்கு உதவ நினைப்பேன்.. ஆனால் அப்போ காசில்லை.. இப்போ பணம் வரவும், நிறைய ஆசிரமத்துக்கு உதவி செய்றேன் என்றார்..

நயன்தாரா
இதனிடையே, ஜிபி முத்துவிடம் ஒருவரியில் விடை சொல்லும்படி நாம் கேள்விகளை எழுப்பினோம்.. அதில் ஒருசில கேள்வி பதில் இவை
கேள்வி: நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று கொண்டார்களே, அது சரியா?
பதில்: அப்படியா? இரட்டை குழந்தையா? இது எப்போ?
கேள்வி: சமீபத்தில் வாடகை தாய் மூலமாக பிறந்ததே?
பதில்: அப்படியா? குழந்தை பிறந்திடுச்சா? இப்பதான் கேள்விப்படறேன்
கேள்வி: தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை சரியா?
பதில்: யார் ரவி? இப்ப அவர்தான் இங்கே இருக்காரா?
கேள்வி: அவரை திரும்ப பெறணும்னு திமுக சொல்லுதே அது சரியா?
பதில்: அப்படியா? கவர்ன்மென்ட்டுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யட்டும்.. அரசாங்கம் எப்பவுமே சரியாதான் செய்யும். எனக்கு அரசியல் தெரியாது.. ஆனால், அதிமுகவில் அம்மாவை பிடிக்கும்.. அம்மா இறந்தப்போ, ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தேன்.. ஒரு பெண்ணாக நின்று ஒற்றையாக நின்று அனைத்தையும் சாதித்தவர்.. அதனால் அம்மாவை பிடிக்கும்" என்றார் ஜிபி முத்து.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications