போலீசில் 2-வது முறையாக சீமான் ஆஜராகவில்லை! நடிகை விஜயலட்சுமி- கட்டாய கருக்கலைப்பு, திருமண மோசடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து ஏமாற்றியது, 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பான புகார் மீதான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போலீசில் 2-வது முறையாக இன்றும் ஆஜராகவில்லை.

நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது 2011-ல் திருமண மோசடி புகார் கூறியிருந்தார். பின்னர் அந்த வழக்கை அவர் திரும்பப் பெற்றார். இதன் பின்னர் சமூக வலைதளங்களில் சீமான் மீது இடைவிடாத புகார்களை தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி.

Actress Vijayalakshmi Case: Naam Tamilar Seeman to appear before Chennai Police today?

மீண்டும் விஜயலட்சுமி புகார்: இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த நடிகை விஜயலட்சுமி போலீசில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் மீது கட்டாயக் கருக்கலைப்பு, நகை பணம் பறிப்பு என ஏராளமான அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

சீமான் திட்டவட்ட மறுப்பு: இந்தப் புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்து வந்தார். அத்துடன் மானங்கெட்ட ஒருத்தியுடன் சண்டை போடுவதா? என கேள்வி எழுப்பினார். லோக்சபா தேர்தல் பணிகளில் இருந்து தம்மை திசைதிருப்ப, தடுக்க இத்தகைய சதிவேலைகள் செய்யப்படுகின்றன. நடிகை விஜயலட்சுமியின் புகாரின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றார் சீமான்.

விசாரணை, வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை: இதனிடையே விஜயலட்சுமி புகார் மீது சென்னை போலீசார் முதலில் விசாரணை நடத்தினர். விஜயலட்சுமியிடம் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்திய பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கட்டாய கருக்கலைப்பு புகார் தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

விசாரணைக்கு சம்மன்: விஜயலட்சுமியின் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் செப்டம்பர் 9-ந் தேதி சீமானை விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். தமக்கு கட்சிப் பணிகள் இருப்பதால் செப்டம்பர் 12-ந் தேதி ஆஜராகிறேன் என சீமான் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இன்று ஆஜராகவில்லை: இதனையும் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு ஏன் விசாரணைக்கு வர பயப்படுறீங்க சீமான்? என கேள்வி கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை போலீஸ் முன்பாக சீமான் விசாரணைக்கு ஆஜராகக் கூடும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 2-வது முறையாக சீமான் இன்று போலீஸ் விசாரணையில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் குழு ஆஜராகி இருந்தனர்.

வைரம் புதைப்பு: இதனிடையே சீமானின் வீட்டில் வைரம், தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு புகாரை விஜயலட்சுமி கூறியிருந்தார். அதன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவும் 3 நாட்கள் கெடு விதித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+