சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி.. பரபரப்பு வாக்குமூலம்.. 'நகைக்கடை' ஹரி நாடாருக்கு ஸ்கெட்ச்

ஹரிநாடாரை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை போலீசார் ஆர்வம் காட்டி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் ஜெயிலில் இருக்கும் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த திருவான்மியூர் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Actress Vijayalakshmi புகார்..Hari Nadar-க்கு ஸ்கெட்ச்! | Oneindia Tamil

    தோளில் புரளும் நீண்ட தலைமுடி, கழுத்து மற்றும் கைகளில் எல்லாம் கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், காஸ்ட்லி கார்.. பந்தா லுக்.. இதுதான் ஹரி நாடாரின் தோற்றம்!

    அன்று, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு அதிமுகவுக்கு, திமுகவுக்கு அடுத்த இடத்தை பிடித்து எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தவர்... அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுடன் எந்நேரமும் வலம் வந்து கொண்டிருப்பாரே, சாட்சாத் அவரேதான்..!

     மகன் மேல சத்தியம் செய்வீங்களா? மொட்டையடித்து சீமானுக்கு மீண்டும் நடிகை விஜயலட்சுமி சவால் மகன் மேல சத்தியம் செய்வீங்களா? மொட்டையடித்து சீமானுக்கு மீண்டும் நடிகை விஜயலட்சுமி சவால்

     பனங்காட்டுப்படை கட்சி

    பனங்காட்டுப்படை கட்சி

    சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார்... ஆனால், ஒரு மோசடி வழக்கில் சிக்கி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு இப்போது பரப்பன அக்ரஹார ஜெயிலில் உள்ளார்... இந்நிலையில், இவரை பற்றின ஒரு செய்தி கடந்த 2 நாட்களாகவே பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது.

    விஜயலட்சுமி

    விஜயலட்சுமி

    அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பவர் நடிகை விஜயலட்சுமி... கடந்த 2020ம் ஆண்டு அந்த கட்சி தலைவருக்கு ஆதரவாக, நடிகை விஜயலட்சுமியை ஹரிநாடார் மிரட்டியதாக கூறப்படுகிறது.. செல்போன் மூலமாகவும், சோஷியல் மீடியாவிலும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    விஜயலட்சுமி

    விஜயலட்சுமி

    எனவே, விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. அப்போது விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் எனவும் விஜயலட்சுமி வலியுறுத்தினார்.

     விஜயலட்சுமி

    விஜயலட்சுமி

    அத்துடன், திருவான்மியூர் போலீசிலும் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்குதான் தூசி தட்டி எடுக்கப்படுகிறது.. விஜயலட்சுமி உயிர் பிழைத்து கொண்டதால், அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் அந்த புகார் கிடப்பில் போட்டதாக கூறப்பட்டது.. இந்நிலையில், விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் ஹரி நாடாரை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முனைப்பு காட்டி வருகிறார்களாம்..

    பரபரப்பு

    பரபரப்பு

    இதற்காக, டிரான்சிட் வாரண்ட் வழங்க வேண்டும் என்று சென்னை திருவான்மியூர் போலீஸ் சார்பில் பெங்களூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.. வேறு ஒரு கேஸில், ஹரிநாடார் ஜெயிலில் இருப்பதால், பெங்களூர் கோர்ட் அனுமதி அளித்தவுடன் ஓரிரு நாட்களில் ஹரிநாடாரை கோர்ட்டில் திருவான்மியூர் போலீசார் ஆஜர்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூர் ஜெயிலில் விஐபி அந்தஸ்தில் இருந்தாலும், போலீசாரின் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளால் வெளியில் வர இயலாத நிலைக்கு ஆளாகி உள்ளார் ஹரிநாடார்..

     கைது?

    கைது?

    இதையடுத்து, எந்நேரமும் ஹரிநாடாரை போலீசார்கள் "தூக்க" வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. விஜயலட்சுமி அன்று மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலம் படுஸ்டிராங்காக இருப்பதாலும், 3வது குற்றவாளியாக ஹரிநாடார் பெயரும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த வழக்கின் தீவிரம் அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது..!

    English summary
    Actress Vijayalakshmi issue and Alankulam Hari nadar arrested soon, say Police Sources
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X