நைட் பார்ட்டிக்கு சென்ற யாஷிகா ஆனந்த்.. காரில் அதிவேக பயணத்தால் விபத்து.. டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல்
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Recommended Video
பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். ஒரு மாடலான இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். இவர் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இன்னும் இவரது கையில் 5 க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் இரவு தனது தோழி மற்றும் இரு ஆண் நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் இரவு பார்ட்டிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு பார்ட்டி
பார்ட்டி முடித்துவிட்டு காரில் இவர்கள் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காரை யாஷிகா ஓட்டினார். அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அருகில் அமர்ந்திருந்தார். பின்புறம் சையது, ஆமீர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

தடுப்புச் சுவர்
அப்போது அவரது கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வள்ளிச் செட்டி பவானி பலியானார். மற்ற மூவர் காயமடைந்தனர். இதில் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக சொல்லப்படுகிறது.

விபத்திற்கான காரணம்
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யாஷிகா வேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அவர் மது அருந்தி இருந்தாரா என்பதையும் போலீஸார் விசாரிக்கிறார்கள்.

ஓட்டுநர் உரிமம்
இந்த நிலையில் யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரை அதிக வேகத்தில் இயக்கியது, விபத்தை ஏற்படுத்தியது, உயிரிழப்பை ஏற்படுத்தியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications