கூவத்தூரில் நடிகைகளா? 'என்ன முட்டாள்தனம் இது'.. சேலம் ஏ.வி.ராஜுவை வெளுத்துவிட்ட நடிகை ஷர்மிளா
சென்னை: கூவத்தூரில் நடிகைகள் வந்ததாக சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி கடும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ஏ.வி.ராஜுவை நடிகை ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் இருப்பதாகவும், அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பேட்டியில் கூறினார். இதையடுத்து சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து ஏ.வி.ராஜுவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனிடையே இந்த விவகாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு , சென்னையை அடுத்த கூவத்தூரில் 2017ம் ஆண்டு நடந்த சம்பவம் என்று கூறி சில விவகாரங்களை தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தொடர்பான பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதுபற்றி பேட்டி அளித்த ஏவி ராஜூ கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்த தெரியாமல் நடத்திக்கொண்டு இருக்கிறார். கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தானே இவர். இவருக்கு எப்படி அதிமுகவின் கட்சி விதிகள் தெரியும். கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.

நீ சாதாரண ஒரு எம்எல்ஏ. நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் என்று தெரியும். அதிமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் என்ன கூத்து அடித்தார்.. என்ன செய்தார்.. அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்றெல்லாம் தெரியும். அந்த பிரபல நடிகையை அவர் கேட்டார். அவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் . கருணாஸ் அங்கே இருந்தார். அவர்தான் ஏற்பாடு செய்தார். இதற்கெல்லாம் காசு கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். இதற்கு நான் ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது. ஆனால் இதெல்லாம் நடந்தது. என்னை நீக்கியது போல அதிமுக மாவட்ட செயலாளர்கள் யாரையாவது 2 பேரை எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்க இயலுமா? அப்படி 2 மா.செக்களை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவியே பறிபோய்விடும்" இவ்வாறு ஏவி ராஜூ அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
ஏவி ராஜூ அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலரும் ஏவி ராஜூவிற்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். நடிகை ஷர்மிளாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், என்ன முட்டாள்தனமாக இந்த தோழர் இப்படி பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்... ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது... இத்தனை ஊடகத்தையும் மீறி ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications