சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்! பைக் நிறுத்த இடமில்லாமல் திணறும் பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களைத் தேர்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகள் தங்கள் வாகனங்களை ரயில் நிலையங்களின் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்திவிட்டு ரயில்கள் மூலம் பணியிடங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் சென்று வருகிறார்கள்.

ஆங்காங்கே மெட்ரோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நிறைய பேர் மெட்ரோ ரயில்கள் மூலம் பயணிக்கிறார்கள். இதன் மூலம் நேரமும் எரிபொருளும் மிச்சமாவதால் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தான இந்த மெட்ரோவை தேர்வு செய்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் நிறைய வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நெரிசலாக இருக்கிறது. குறிப்பாக ஆலந்தூர், விமான நிலையம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட நிலையங்களில் காலை 10 மணிக்கே பார்க்கிங் பகுதி நிரம்பி வழிகிறது.
இதனால் நிறைய பேரின் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில்தான் இரண்டாவது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. மேம்பாலம் மற்றும் சுரங்க பாதைகளில் 120 க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
அனைத்து ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் வசதிகள் இருந்தாலும் ரயில் நிலையங்கள் அருகே வாகனங்கள் நிறுத்த கூடுதல் இடங்களை மெட்ரோ நிறுவனம் தேடுகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணப்படுகிறது. அருகே இருக்கும் இடங்களை வாங்கி இருக்கிறோம். மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த இடங்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் கூடுதல் இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.
இதன் படி கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி பைபாஸ், சோழிங்கநல்லூர், சிறுச்சேரி , போரூர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களைத் தேர்வு செய்து இறுதி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன என தெரிவித்திருந்தனர்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications