வெயிட்டிங் ஓவர்.. புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்! இது ரொம்ப முக்கியம்!
சென்னை : தமிழகத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி வரை குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு முகவரி சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அதற்கு பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது. மாதாமாதம் உணவுப்பொருட்கள், பொங்கல் பரிசு தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவை ரேசன் கார்டுகள் மூலம் தான் வழங்கப்படுகிறது.

தற்போது தமிழக முழுவதும் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2024 வரை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்திருக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் கூட தற்போது மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக தனி தனியாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வரும் ரேஷன் கார்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் ரேஷன் கார்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக அதாவது மார்ச் மாதம் வரை சுமார் 45 ஆயிரம் குடும்ப அட்டைகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் நிறைவடைந்ததும் சுமார் 2 லட்சத்து 89 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பட்ட நிலையில் சில விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் 80 ஆயிரம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியும், கள ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 15, ஜூன் 2024 வரை பெயர் நீக்கம் சேர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளுக்காகவும் புதிய விண்ணப்பங்கள் அளித்தவர்களுக்கான முகவரி சரி பார்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் முதல் பேட்ஜ் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடும்ப அட்டைகள் வழங்கப்படலாம் என்கின்றனர் அதிகாரிகள்.
அதே நேரத்தில் சிலர் உரிய ஆவணங்களை இணைக்காமல் இருப்பதாலும், விண்ணப்பத்தில் குளறுபடிகள் இருப்பதால் அவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க தாமதமாவதாக கூறுகின்றனர் அதிகாரிகள். புதிதாக திருமணம் ஆனவர்கள், ஏற்கனவே தங்கள் பெயர் இருந்த குடும்ப அட்டையில் நீக்கிவிட்டு புதிய உறுப்பினருடன் உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
மேலும் வீட்டு முகவரி ஆவணம், வாடகை ஒப்பந்தம், கரண்ட் பில், ஆதார் எண், எரிவாயு இணைப்பு உள்ளிட்ட விபரங்களை இணைத்தால் விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும். அதே நேரத்தில் சிலர் ரேஷன் கார்டில் ஏற்கனவே நீக்கப்பட்ட பெயர் குறித்த ஆவணங்களை இணைக்காமல் விட்டு விடுகின்றனர். மேலும் பெயர் நீக்கத்திற்கு விண்ணப்பித்து விட்டு அந்த எண்ணைக் கொண்டு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாகத் தான் பலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே முறையான ஆவணங்களை கொடுத்தால் உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications