லோக்சபா தேர்தல்.. 40 தொகுதிகளிலும் களமிறங்கும் அதிமுக.. 21 முதல் விருப்பமனு விநியோகம் - முழு விபரம்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 21ஆம் தேதியில் இருந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னதாக திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க மாநிலம் முழுவதும் குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணிக்கட்சியினருடன் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது பற்றி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுக்களை ரூ.2000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தொகுதியை குறிப்பிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ரூ. 50000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் அதிமுக இன்று மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 21ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உடன் யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று இதுவரை முடிவாகவில்லை. இந்த நிலையில் 40 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. கூட்டணி முடிவாகாவிட்டால் இரட்டை இலை சின்னத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க தயாராகவே உள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications