திடீர்னு என்னாச்சு.. "விடியா அரசு".. எடப்பாடி ஒன்னு சொல்ல.. ஓபிஎஸ் இன்னொன்னு சொல்ல.. இதுல கூடவா?

பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக இன்று புறக்கணித்துள்ளது.. இது தொடர்பான விளக்கத்தை செய்தியாளர்களிடம் தந்தபோது, எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு பதில் அளித்தனர்.

2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் தொடங்கி உள்ளது.. சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது...

தமிழ்நாட்டில் முதன் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது... இதனையடுத்து, சட்டப்பேரவையில் எல்லாமே கம்ப்யூட்டர் கணினி மயமாகியுள்ளன.

நிதித்துறை

நிதித்துறை

சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு இது முதல் பட்ஜெட் ஆகும்.. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதாலும் எதிர்பார்ப்புகள் கூடி உள்ளது..

 பட்ஜெட்

பட்ஜெட்

நிதியமைச்சர் பேச ஆரம்பித்தபோதே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முதல் ஆளாக எழுந்து பேச ஆரம்பித்தார்.. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு தங்களை பேச வாய்ப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு கூறினார்.. ஆனால், பட்ஜெட் தாக்கலுக்குப்பின் பேச அனுமதிக்கிறேன் என்று பிடிஆர் தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தன் கருத்தை வலியுறுத்தியபடியே இருந்தார்..

 உட்காருங்க

உட்காருங்க

எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டபோது, அதற்கு பேரவைத் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை.. அப்போது அதிமுக உறுப்பினர்கள் மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர்.. அவர்கள் பக்கம் திரும்பிய சபாநாயகர் அப்பாவு, "அமைதியாக எல்லாரும் உட்காருங்க" என்று அறிவுறுத்தினார்.. ஆனாலும் 10-க்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டு கொண்டே இருந்தனர்.. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளி நடப்பு செய்வதாக அறிவித்துவிட, அவரை தொடர்ந்து மற்ற அதிமுகவினரும் சேர்ந்தே வெளியேறினர்..

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

இதற்கு பிறகு, ஏன் வெளிநடப்பு செய்தோம் என்பதற்கான விளக்கத்தை எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்... "சட்டமன்ற தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை திமுக தந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் பெற்றோர், மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த விடியா அரசு.

 நீட் தேர்வு

நீட் தேர்வு

சட்டமன்ற தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை திமுக தந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் பெற்றோர், மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த விடியா அரசு" என்றார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

எடப்பாடி பேசிக் கொண்டிருக்கும்பேதே, செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க முற்பட்டார்.. ஆனால், அப்போது ஓபிஎஸ் குறுக்கிட்டு பதிலளித்தார்.. அவரையடுத்து எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்... அதாவது ஒரே கேள்விக்கு 2 பேரும் பதில் அளித்ததால், செய்தியாளர்கள் குழப்பமடைந்தனர்... பேட்டியிலும் போட்டியா? இங்கே வந்தும் போட்டியா? இதிலும் போட்டியா? என்று வியப்படைந்தனர்..

அதிருப்தி

அதிருப்தி

இதற்கு முன்னரும் இவங்க 2 பேரும் இப்படித்தான், போட்டி போட்டு மாறி மாறி பேட்டி அளித்தனர்.. பேட்டி மட்டுமில்லை.. அறிக்கைகளும் இப்படித்தான் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இதனால் கட்சி தொண்டர்கள் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள நிலையில், இந்த போட்டி பட்ஜெட் கூட்டம் வரை தொடர்ந்து வருகிறது.. திமுக பொது எதிரியாக இருந்தாலும், இவர்களுக்குள் உள்ள அதிகார போட்டி எப்போது முடிவுக்கு வருமோ என்று ரத்தத்தின் ரத்தங்கள் காத்து கிடக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+