"கீழ்த்தரமான" பொதுக்குழு! எம்ஜிஆர் விதிகளை கூட மதிக்கவில்லை.. விளாசிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் எடப்பாடி
சென்னை: முன்னாள் எம்பி மைத்ரேயன் உள்ளிட்ட பல ஓபிஎஸ் அணியில் நேற்று இணைந்த நிலையில், இது ஓபிஎஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. அதிமுக சில ஆண்டுகளாக இரட்டை தலைமையில் இயங்கி வந்த நிலையில், அதிலும் இப்போது பிரச்சினை கிளம்பியது.
எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரு பிரிவுகளாகவே இயங்கி வருகின்றர். பல வாரங்களாகவே இந்தப் பிரச்சினை தான் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.

அதிமுக
முதலில் ஓபிஎஸ் கூட்டுத் தலைமையே கட்சி தேவை என்றார். இருப்பினும் அதைத் திட்டவட்டமாக மறுத்த எடப்பாடி ஒற்றை தலைமைக்குத் தேவையான நடவடிக்கையை எடுத்து வந்தார். கடந்த ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்த நிலையில், அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

வழக்கு
அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் உச்சம் அடையத் தொடங்கியது. இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த போதிலும், ஓபிஎஸ் விடாமல் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் எடுத்துச் சென்றுள்ளார். அங்குக் கொடுக்கப்படும் தீர்ப்பே முக்கியமானதாக இருக்கும்.

விழா
இடையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரும் எதிர்த் தரப்பு ஆதரவாளர்களைத் தொடர்ச்சியாகக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வந்தனர். மேலும், ஒட்டுமொத்த தொண்டர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளதாகவும் இருவரும் கூறி வந்தனர். இந்தச் சூழலில் சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழா நடைபெற்றது.

மைத்ரேயன்
முன்னாள் எம்பி மைத்ரேயன் இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். கடந்த கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி பக்கம் சென்ற நிலையில், இப்போது அவர் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ பன்னீர் செல்வம் எடப்பாடி தரப்பைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அதிமுக பொதுக்குழு தொடர்பாகவும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

ஓபிஎஸ்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், "அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கும் போதே, மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் சிறப்பாகச் சட்ட விதிகளை உருவாக்கி இருந்தார். தொண்டர்கள் தான் தலைமை பொறுப்பைத் தீர்மானிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த எம்ஜிஆர் அதற்கு ஏற்ப சட்ட விதிகளை உருவாக்கினார். அப்படித்தான் கட்சியில் உள்ள தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு செய்யப்பட்டது. இதைத் தேர்தல் அதிகாரியே ஏற்றுக்கொண்டார்.

கீழ்த்தரமான பொதுக்குழு
இந்தச் சூழலில் அதிமுகவில் ஏன் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கித் தந்த விதிகளை மாற்றி, பொதுக்குழு என்ற பெயரில் ஒன்றை நடத்தினார்கள். அதை நீங்கள் அனைவரும் டிவியில் பார்த்து இருப்பீர்கள்.. இரண்டு பொதுக்குழுக் கூட்டத்திலும் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இப்படியொரு கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை.

மதிக்கவில்லை
செயலாளர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்றால் குறைந்தது 10 ம. செக்கள் முன்மொழிய வேண்டும். தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்குச் சர்வாதிகார எண்ணம் வரக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் இந்த சட்ட விதிகளை உருவாக்கினார். ஆனால், அதையெல்லாம் அவர்கள் மதிக்காமல் நடந்து வருகிறார்கள். இப்போது நடைபெறும் தர்மயுத்தம் அதற்குத் தான். நிதியை நிலைநாட்ட! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதைத் தர்மமே வெல்லும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications