சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திமுககாரர்கள் உத்தமர்களா? புத்தர்களா?.. மொத்தம் 23 பேராம்".. கே.சி. வீரமணி ரெய்டால் பொங்கிய மாஜி

கேசி வீரமணியிடம் ரெய்டு குறித்து ஜெயக்குமார் திமுகவை சாடியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிமுக பயப்படாது. காவல்துறையை வைத்து அதிமுகவினரையும், முன்னாள் அமைச்சர்களையும் பயமுறுத்திவிடலாம் என்று நினைக்கலாம்... அது ஒரு போதும் நடக்காது.. திமுக அமைச்சர்கள் 23 பேர் மீது வழக்கு உள்ளது. திமுகவினர்கள் உத்தமர்களா? புத்தர்களா?" என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Recommended Video

    AIADMK முன்னாள் அமைச்சர் K.C. Veeramani வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டால் பரபரப்பு

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரும், மாஜி அமைச்சருமான கேசி வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்... இவர் கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.

    அனுபவமே இல்லாத 4 பேரை.. விண்ணுக்கு அனுப்பிய அனுபவமே இல்லாத 4 பேரை.. விண்ணுக்கு அனுப்பிய

    இந்நிலையில், சென்னை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள கேசி வீரமணி உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சோதனை

    சோதனை

    சென்னை சாந்தோமில் உள்ள கேசி வீரமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல, அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுகிறது. வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள இவருடைய இல்லத்தில் சோதனை நடக்கிறது.. காரணம், இவர் வீரமணிக்கு பினாமி என்று சொல்லப்படுகிறது.

    வீரமணி

    வீரமணி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் வீரமணிக்கு சொந்தமான ஸ்டார் ஹோட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்... மூக்கண்டப்பள்ளி பகுதியிலும் வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதி உள்ளது.. இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆரில் 2016-2021 ஆண்டு காலத்தில் வருமானத்தை விட 654% சதவீதம் அளவுக்கு சொத்து குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

    எப்ஐஆர்

    எப்ஐஆர்

    அத்துடன் அவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது... மேலும், முறைகேடாக அவர் பெயரிலும், அவரது 80 வயது தாய் பெயரிலும் சொத்துகளை சேர்த்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

    சோதனை

    சோதனை

    இந்நிலையில், மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் உள்நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "திமுக ஆட்சி அமைத்தது முதல் இப்படி காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் அதிமுகவை ஒடுக்க வேண்டும் என்று இந்த நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது. 500கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக வழங்கியுள்ளது. அதனை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பும் வகையில் இதுபோன்று தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை பணி செய்ய விடாமல் தடுக்க இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனையெல்லாம் அதிமுக எதிர்கொள்ளும்.. நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்போம்.

    கேள்வி

    கேள்வி

    லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிமுக பயப்படாது. காவல்துறையை வைத்து அதிமுகவினரையும், முன்னாள் அமைச்சர்களையும் பயமுறுத்திவிடலாம் என்று நினைக்கலாம்... அது ஒரு போதும் நடக்காது.. திமுக அமைச்சர்கள் 23 பேர் மீது வழக்கு உள்ளது. திமுகவினர்கள் உத்தமர்களா? புத்தர்களா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

    English summary
    ADMK Ex Minister Jayakumar says about DMK and CM MK Stalin: KC Veeramanis Raid
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X