அதிமுக முன்னாள் அமைச்சரே நம்ம திட்டத்தை பாராட்டுறாரு.. பெருமை பொங்க பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார் எனத் தெரிவித்தார்.
திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய புதிய கால்பந்தாட்ட மைதானத்தை இன்று திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் அங்கு விளையாட்டு வீரர்களுக்கு புதிய விளையாட்டு உபகாரங்களை வழங்கினார். அப்போது புதிய மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி ஒன்றையும் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து, ஜவகர் நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு இலவச கண் மருத்துவமனையினை துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, பல்வேறு அரசு கட்டிடங்களின் புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புதிய எழுச்சி, புத்துணர்ச்சி பெறுகிறேன். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொளத்தூர் தொகுதியில் 1896 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மனுக்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துவிட்டது.
சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபோது, எங்களுக்காக வாக்களித்த மக்கள் சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்லும் வகையில் பணியாற்றுவோம் என்று கூறியிருந்தேன். அதே போல், எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்கள் பணி அமையும் என்று நான் தெரிவித்தேன். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடியுமா என பலர் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை மிக மோசமாக இருந்ததால், எனக்கே சிறிது அச்சம் ஏற்பட்டது. ஆனால் நிதி நிலைமையை சரிசெய்து, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நிறைவேற்றினோம். அதிலும் குறிப்பாக, அறிவித்ததற்கு முந்தைய நாளே பெண்களின் கணக்கில் ரூ.1000 செலுத்தினோம்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தனது தொகுதியில் 3 முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே நன்றி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் கட்சி பாகுபாடு, அரசியல் பாகுபாடு இன்றி அனைவருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன." எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications